இந்தியா மறுபடியும் அந்த தப்பை பண்ண மாட்டாங்க.. இந்தியாவை வீழ்த்த பசியுடன் இருக்கோம்.. மகாராஜ் பேட்டி

Keshav Maharaj
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிகள் மோதும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்குகிறது. அத்தொடரில் சொந்த மண்ணில் விளையாடும் இந்தியாவுக்கு தென்னாபிரிக்கா மிகப்பெரிய சவாலைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியனாக திகழும் தென்னாபிரிக்க அணியில் பவுமா, மார்க்ரம், ரபாடா போன்ற தரமான வீரர்கள் நிறைந்திருக்கிறார்கள்.

அத்துடன் இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மைதானங்கள் ஒரு கட்டத்துக்கு பின் சுழலுக்கு சாதகமாக இருப்பது இயற்கையாகும். அதைப் பயன்படுத்தி இந்தியாவை வீழ்த்துவதற்காக கேசவ் மகாராஜ், சீனுராஜ் முத்துசாமி, சைமன் ஹார்பர் ஆகிய 3 ஸ்பின்னர்களுடன் தென்னாப்பிரிக்கா வந்துள்ளது. இந்நிலையில் சவாலான இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்கும் பசியுடன் தெனாப்பிரிக்க வீரர்கள் இருப்பதாக கேசவ் மகாராஜா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்தியாவை வீழ்த்துவோம்:

கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா தோற்க சுழலுக்கு சாதகமான பிட்ச்கள் முக்கிய காரணமானது. எனவே இம்முறையும் அதிகப்படியான சுழலுக்கு சாதகமான பிட்ச்க்களை அமைத்து இந்தியா தவறு செய்யாது என்று அவர் கணித்துள்ளார். மேலும் சமீபத்தில் பாகிஸ்தான், இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் வென்றதைப் போல தற்போது இந்தியாவிலும் வெற்றி பெறுவோம் என்று மகாராஜ் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இது பற்றி மகாராஜ் பேசியது பின்வருமாறு. “இந்தியாவை இந்தியாவில் தோற்கடிக்க வேண்டும் என்ற பசியும் ஆசையும் எங்களுடைய அணிக்குள் இருக்கிறது. இது எங்களுக்கு மிகவும் கடினமான தொடராக இருக்கும். இது பெரிய சோதனையாக இருக்கும் என்று கருதுகிறோம். நாங்கள் தரத்தில் எந்த நிலையை எட்டியுள்ளோம்? என்பதைப் பார்ப்பதற்கு இந்திய தொடர் அற்புதமான வாய்ப்பாக இருக்கும்”

- Advertisement -

மகாராஜ் நம்பிக்கை:

“நாங்கள் ஆசியக் அண்டத்தில் உள்ள மற்ற நாடுகளில் வெற்றி பெறத் துவங்கியுள்ளோம். அந்த வரிசையில் இந்த வேலையையும் நாங்கள் எடுத்துக் கொள்ள விரும்புகிறோம். சமீபத்தில் பாகிஸ்தானில் நாங்கள் அனுபவித்ததைப் போல இங்கே சுழலுக்கு சாதகமான சூழ்நிலைகள் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இங்கே வழக்கமான டெஸ்ட் பிட்ச்கள் இருப்பதையே நீங்கள் பார்க்க விரும்புவீர்கள்”

இதையும் படிங்க: பாகிஸ்தானை விட தரமான இந்தியாவை வீழ்த்தி வரலாறு படைக்க.. எங்ககிட்டயும் 3 துருப்புச்சீட்டு இருக்கு.. கோச் பேட்டி

“சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதில் 2 போட்டிகளும் 4, 5வது நாட்கள் வரை சென்றது. எனவே இந்திய பிட்ச்கள் பற்றிய வழக்கமான கதை மாறியிருக்கும் என்று நம்புகிறேன். அற்புதமான அணியான இந்தியா அடுத்த தலைமுறை நோக்கிய மாற்றத்தைத் தாண்டி நன்றாக வந்துள்ளது. அவர்களும் நல்ல பிட்ச்களையே விரும்புவார்கள் என்று நினைக்கிறேன். நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து வேகத்தைப் பெற்றுள்ளோம். டாஸ் இல்லாமல் வெற்றி பெற முடியும் என்பதை நாங்கள் காண்பித்துள்ளோம்” எனக் கூறினார்.

Advertisement