பாகிஸ்தானை விட தரமான இந்தியாவை வீழ்த்தி வரலாறு படைக்க.. எங்ககிட்டயும் 3 துருப்புச்சீட்டு இருக்கு.. கோச் பேட்டி

Shukri Cornad
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்கும் அத்தொடர் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறுகிறது. அத்தொடரில் உலக டெஸ்ட் சாம்பியன் தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு அதனுடைய சொந்த மண்ணில் மிகப்பெரிய சவாலைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியில் ஐடன் மார்க்ரம், ரபாடா, மார்கோ யான்சென் போன்ற தரமான வீரர்கள் நிறைந்துள்ளனர். அத்துடன் இந்தியாவில் இருக்கும் மைதானங்கள் சுழலுக்கு சாதகமாக இருப்பது வழக்கமாகும். அதைப் பயன்படுத்தி இந்தியாவை சாய்ப்பதற்காக கேசவ் மகாராஜ், சேனுரான் முத்துசாமி மற்றும் ஹார்மர் ஆகிய 3 தரமான ஸ்பின்னர்கள் தென்னாப்பிரிக்காவிடம் இருக்கிறார்கள்.

- Advertisement -

வரலாறு படைப்போம்:

அத்துடன் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1 – 1 (2) என்ற கணக்கில் சமன் செய்து தென் ஆப்பிரிக்கா அசத்தியது. இந்நிலையில் வலுவான இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பெறுவதற்குத் தேவையான 3 துருப்புச்சீட்டு ஸ்பின்னர்கள் தென்னாப்பிரிக்காவிடம் இருப்பதாக பயிற்சியாளர் சுக்ரி கோன்ராட் தெரிவித்துள்ளார்.

மேலும் பாகிஸ்தானை விட இந்தியா தரமான அணி என்பதை அறிந்து விளையாடி வெற்றி பெறுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி சுக்ரி பேசியது பின்வருமாறு. “உங்களுடைய அணியில் நல்ல ஸ்பின்னர்களை கொண்டிருப்பது இத்தொடரில் மசாலாவை சேர்க்கிறதல்லவா? அது எங்களுக்கு நிறைய தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது. அதற்காக கடந்த காலங்களில் நாங்கள் நல்ல ஸ்பின்னர்களை கொண்டிருக்கவில்லை என்று சொல்லவில்லை”

- Advertisement -

பயிற்சியாளர் நம்பிக்கை:

“ஆனால் தற்போது கேசவ், சைமன், சேனுரான் ஆகியோரால் எங்களிடம் இன்னும் சிறந்த ஸ்பின்னர்கள் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். அது இங்குள்ள சூழ்நிலையில் எங்களால் இந்தியாவுக்கு சவாலைக் கொடுக்க முடியும் என்ற தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது. அதனால் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மற்றும் இந்தியாவில் எங்களால் சொந்த வரலாற்றை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது”

இதையும் படிங்க: தெ.ஆ தொடரில் அவருக்கு பதில்.. துருவ் ஜுரேல் விளையாடலன்னா ஆச்சரியப்படுங்க.. கோச் ரியான் பேட்டி

“இந்தியாவை உலகில் எங்கு எதிர்கொண்டாலும் அது சவாலானதாக இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் ஈடன் கார்டன்ஸ் போன்ற புகழ்பெற்ற மைதானத்தில் இந்தியாவை எதிர்கொள்வது இன்னும் கடினமாக இருக்கும். பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடத் தொடரை இந்தியாவுடன் நீங்கள் ஒப்பிட முடியும் என்று நான் நினைக்கவில்லை. இது எங்களுக்கு மிகப்பெரிய சவால். என்னுடைய 20 வருட கேரியரில் இதை விட பெரிய சவால் இருக்க முடியாது” என்று கூறினார்.

Advertisement