
ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கேசவ் மஹராஜ் தலைமையிலான தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதனைத்தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்சில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 418 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய ஜிம்பாப்வே அணி 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதன் காரணமாக வலுவான முன்னிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் தென்னாப்பிரிக்க அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 49 ரன்களை குவித்துள்ளது. தற்போதைய நிலையில் 216 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் விளையாட இருக்கும் :
தென்னாப்பிரிக்க அணி மேலும் ரன்களை குவிக்கும் பட்சத்தில் எளிதாக இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக விளையாடிய கேசவ் மஹாராஜா முதல் இன்னிங்சின் போது அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 70 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அவர் எடுத்த இந்த மூன்று விக்கெட்டுகளின் மூலம் முதல் தென்னாப்பிரிக்க வீரராக மாபெரும் வரலாற்று சாதனை ஒன்றையும் அவர் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் கேஷவ் மகாராஜ் நிகழ்த்திய சாதனை யாதெனில் : கடந்த 2016-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 200 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இதையும் படிங்க : 9 சிக்ஸ் 103 ரன்ஸ்.. டு பிளேஸிஸ் மிரட்டல் சதம்.. எம்ஐ அணியை வீழ்த்திய டிஎஸ்கே.. சிஎஸ்கே போல ஹாட்ரிக் தகுதி
இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.