அட்டாக் செய்வாங்க.. சுமாரான ஃபார்மில் இருந்தாலும் அவர் ஆஸியை அடிச்சா இந்தியா ஜெய்க்கும்.. ஓ’கீபி பேட்டி

Kerry Okeefee
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோத உள்ள 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் குறைந்தது 4 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. அப்போது தான் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியாவால் தகுதி பெற முடியும்.

அந்த சூழ்நிலையில் புஜாரா, ரஹானே ஆகியோர் இல்லாத காரணத்தால் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வெற்றி பெறுவதற்கு விராட் கோலி, ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடுவது அவசியமாகிறது. ஆனால் சமீப காலங்களாகவே சுமாராக விளையாடும் அவர்கள் நல்ல ஃபார்மில் இல்லை. குறிப்பாக சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் தோற்க அவர்கள் முக்கிய காரணமாக இருந்தார்கள்.

- Advertisement -

அட்டாக் செய்வாங்க:

அதனால் இந்திய அணி மீண்டும் ஆஸ்திரேலியாவில் வெற்றி பெறுவது கடினமாகவே மாற்றப்படுகிறது. இந்நிலையில் எப்போதுமே வெளிநாட்டு கேப்டன்களை ஆஸ்திரேலிய பவுலர்கள் அட்டாக் செய்வார்கள் என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் கேரி ஓ’கீபி தெரிவித்துள்ளார். மேலும் விராட் கோலி நல்ல ஃபார்மில் இல்லாதது இந்தியாவுக்கு பின்னடைவு என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் கடந்த காலங்களைப் போல் ஆஸ்திரேலியாவில் விராட் கோலி விளையாடினால் இப்போதும் இந்தியா வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மா முதல் சில போட்டிகளை தவற விடலாம். ஆனால் அவர் கேப்டன். ஆஸ்திரேலிய அணி எப்போதுமே வெளிநாட்டு கேப்டன்களை அட்டாக் செய்ய முயற்சிப்பார்கள்”

- Advertisement -

விராட் கோலி அச்சத்தினால்:

“அது அவர்களுடைய நீண்ட கால திட்டமாக இருந்து வருகிறது. எனவே அவர்கள் ரோஹித் சர்மாவுக்கு எதிராக மிகவும் கடினமாக செய்வார்கள் என்று நினைக்கிறேன். விராட் கோலி நீண்ட வருடங்களாக ஆஸ்திரேலியாவுக்கு சவாலைக் கொடுத்தவர். அவர் என்ன ஒரு அற்புதமான வீரர். ஆனால் விளையாட்டில் காட்டின் ராஜா சற்று பலவீனமாக இருப்பதை உணர்ந்தால் நீங்கள் அவரது கன்னத்தில் கொஞ்சம் குத்த வேண்டும்”

இதையும் படிங்க: 2016-ல் நடந்த அந்த ஒரு தோல்வியை இன்னும் என்னாலும், கோலியாலும் மார்க்க முடியல – கே.எல் ராகுல் பகிர்வு

“எனவே இந்த கோடைகாலத்தில் அவர் எப்படி தொடரை முடிக்கிறார் என்பதை நான் பார்க்க அவளுடன் உள்ளேன். அது இந்தத் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் புள்ளியாகவும் இருக்கும். ஒருவேளை அவர் அற்புதமான தொடரை கொண்டிருந்தால் இந்தியா வெல்லும்” என்று கூறினார். இதை அடுத்து முதல் போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement