வெஸ்ட் இண்டீஸ் அணியில் எத்தனையோ பேர் இருந்தும் 26 வருஷம் கழிச்சி நடந்த சம்பவம் – வரலாறு படைத்த பவுலர்

Roach
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது. இதனால் இத்தொடர் சமநிலையில் உள்ளது.

Roach 2

தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் வேளையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான கீமார் ரோச் ஒரு மிகப்பெரும் சாதனை படைத்துள்ளார். அதாவது வெஸ்ட் இண்டீஸ் அணி வீரரான ஆம்புரோஸ் டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அந்த அணியில் பல்வேறு வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தும் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்கமுடியவில்லை.

- Advertisement -

அதற்கு பிறகு 26 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் 200 விக்கெட் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சாதனையை கீமார் ரோச் படைத்துள்ளார். அவர் நேற்று கிறிஸ் வோக்ஸ் விக்கெட்டை வீழ்த்திய போது இந்த சாதனையை படைத்தார். 1994 ஆம் ஆண்டு கர்ட்லி அம்ப்ரோஸ் டெஸ்ட் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளராக 200 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

Roach 1

அதன் பின்னர் தற்போது 32 வயதாகும் கீமார் ரோச் 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 201 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக வால்ஷ் 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 519 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement