
வெஸ்ட் இண்டீஸ் அணி நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. டிசம்பர் 2ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசி நியூஸிலாந்தை 231 ரன்களுக்கு சுருட்டியது.
அதிகபட்சமாக தேன் வில்லியம்சன் 52, மைக்கேல் ப்ரேஸ்வெல் 47 ரன்கள் எடுத்தார்கள். வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக ஜஸ்டின் கிரிவ்ஸ், ஓஜய் சீல்ட்ஸ், கிமர் ரோச், ஜெய்டேன் சீல்ஸ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸை வெறும் 167 ரன்களுக்கு சுருட்டி வீசிய நியூஸிலாந்து 64 ரன்கள் முன்னிலை பெற்றது.
அதிகபட்சமாக சாய் ஹோப் 56, தக்நரேன் சந்தர்பால் 52 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக ஜேக்கப் டுபி 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அடுத்ததாக விளையாடிய நியூசிலாந்து 466/8 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் டாம் லாதம் 145, ரச்சின் ரவீந்திரா 176 ரன்கள் குவித்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக கிமர் ரோச் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இறுதியாக 531 என்ற இமாலய இலக்கைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்குத் தகுந்தார் போல் ஜான் கேம்பல் 15, சந்தர்பால் 6, அலிக் அதனாஷ் 5, கேப்டன் ரோஸ்டன் சேஸ் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அதனால் 72/4 என ஆரம்பத்திலேயே திண்டாடிய வெஸ்ட் இண்டீஸ்க்கு சாய் ஹோப் நிதானமாக விளையாடி சதத்தை எடுத்து 140 ரன்கள் குவித்து அவுட்டானார்.
அவருடன் இணைந்து விளையாடிய ஜஸ்டின் க்ரிவ்ஸ் சதத்தை அடித்து அசத்தினார். அடுத்து வந்த தேவின் இம்லோச் 4 ரன்களில் அவுட்டானாலும் 37 வயதாகும் கெமர் ரோச் நங்கூரமாக விளையாடி தனது முதல் அரை சதத்தை அடித்தார். அப்போது 5வது நாள் தேநீர் இடைவெளிக்குப்பின் வெற்றிக்காக விளையாடினால் தோற்று விடுவோம் என்பதை உணர்ந்த வெஸ்ட் இண்டீஸ் ட்ராவுக்காக விளையாடியது.
அதற்காக 128வது பந்தில் 53வது ரன்னை எடுத்திருந்த கெமர் கோச் ஆழ்கடலில் போட்ட நங்கூரத்தைப் போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த வகையில் நங்கூரமாகவே விளையாடிய அவர் 200வது பந்து வரை மேற்கொண்டு 1 ரன்னை கூட எடுக்கவில்லை. அப்படி 72 பந்துகளில் ரன்களே எடுக்காத அவர் ஒருவழியாக 201வது பந்தில் 54வது ரன்னை எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் 58* (233) ரன்களை 24.89 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து நியூசிலாந்தின் வெற்றியை உடைத்தார்.
இதையும் படிங்க: 2 வருடம் 20 தோல்வி.. மோசமான உலக சாதனையை உடைத்த இந்தியா.. 3வது ஒன்டேவில் ஒரு மாற்றத்துடன் ராகுல் பேட்டி
அவருடன் சேர்ந்து விளையாடிய ஜஸ்டின் க்ரிவ்ஸ் இரட்டை சதமடித்து 202* (388) ரன்கள் எடுத்தார். அதனால் வெஸ்ட் இண்டீஸ் 457/6 ரன்கள் எடுத்த போது போட்டி டிராவில் முடிந்தது. இதன் வாயிலாக டிராவில் முடிந்த ஒரு டெஸ்ட் போட்டியின் 4வது இன்னிங்ஸில் 200க்கும் மேற்பட்ட பந்துகளை எதிர்கொண்ட முதல் டெய்ல் எண்டர் பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை கெமர் ரோச் படைத்துள்ளார். இதற்கு முன் ட்ராவில் முடிந்த டெஸ்ட் போட்டியின் 4வது இன்னிங்ஸில் 8 – 11 இடங்களில் களமிறங்கிய எந்த டெய்ல் எண்டர் பேட்ஸ்மேனும் 200+ பந்துகளை எதிர்கொண்டதில்லை.