பவுலரை பந்தால் அடித்த கீப்பர். வலியால் பெவிலியன் திரும்பிய வீரர்- வினோத வீடியோ இதோ

cri
- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுவது போல பல்வேறு நாடுகளிலும் பல டி20 தொடர் நடைபெற்று வருகின்றன. அதனை போன்ற ஒரு தொடர் தான் t20 பிளாஸ்ட் இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் இன்று டி20 போட்டியில் தொடரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

இதுபோன்ற போட்டிகளில் பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்கள் இடையே பலத்த போட்டி நடைபெறும். மேலும் அவர்களுக்குள்ளே நடக்கும் விஷயங்களை தாண்டி ஒரு சில விடயங்கள் ரசிக்கும்படி இருக்கும். அதனை போன்று தற்போது ஒரு விடயம் டி20 பிளாஸ்ட் தொடரில் நடைபெற்றுள்ளது.

- Advertisement -

அது யாதெனில் இருஅணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின்போது விக்கெட் கீப்பர் ஒருவர் பேட்ஸ்மேனை ரன்அவுட் செய்கிறேன் என்று செய்த த்ரோவில் பந்துவீச்சாளர் பின்பக்கத்தில் பந்து பட்டது. உடனே வலியால் துடித்த பந்துவீச்சாளர் அந்த இடத்திலிருந்து ஓடியபடி வெளியேறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பல ரசிகர்களும் இந்த வீடியோவினை நகைச்சுவையாக கிண்டல் செய்து பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement