விஜய் ஷங்கரை ஓரம்கட்ட வார்னர் போட்ட திட்டம். மோசமான வீரரை கொண்டு வர பிளான் – விவரம் இதோ

Warner

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடிய இரண்டு போட்டியிலும் சேஸ் செய்ய முடியாமல் தோல்வி அடைந்துள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உடன் 10 ரன்கள் அடிக்க முடியாமல் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது. இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 6 ரன்கள் அடிக்க முடியாமல், மீண்டும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது. இதனால் இனி அடுத்து வரும் போட்டிகளில் மிடில் ஆர்டரை பலப்படுத்தும் வகையில் விஜய் சங்கருக்குப் பதிலாக கேதர் ஜாதவை களமிறக்க ஹைதராபாத் அணி நிர்வாகம் ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.

shankar

தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கும் கேப்டன் வார்னர் அதிரடியாக விளையாடி ஹைதராபாத் அணிக்கு எப்பொழுதும் தொடக்கத்தை அமைத்துக் கொடுத்துவிடுவார். அவர் அமைத்த தொடக்கத்தைப் தொடர்வதற்கு ஒரு முறையான மிடில் ஆர்டர் ஐ ஹைதராபாத் அணி இந்த முறையும் தேடி வருகிறது.

மனிஷ் பாண்டே டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடி ஆட்டத்தில் பரபரப்பை இன்னும் அதிகப்படுத்துகிறார் . இளம் வீரர் அப்துல் சமதை எல்லா நேரமும் நம்பிக் கொண்டிருக்க முடியாது. இவர்கள் இருவரை விட்டால் மீதி உள்ள ஒரு வீரர் விஜய் சங்கர், கடந்த சில தொடர்களாக மிகவும் மோசமாக விளையாடி வருகிறார். இதன் காரணமாகவே ஹைதராபாத் அணி அதனுடைய இரண்டு போட்டிகளிலும் வெற்றியின் பக்கத்தில் சென்று தோல்வி அடைந்தது.

இதன் காரணமாக விஜய் சங்கரை கைவிட்டுவிட்டு, இந்த ஆண்டு இடத்தில் எடுக்கப்பட்ட முன்னாள் சென்னை வீரர் கேதர் ஜாதவை இனி வரும் போட்டிகளில் ஆட வைக்க ஹைதராபாத் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கேதர் ஜாதவ் மிடில் ஆர்டரில் மிக சிறப்பாக விளையாடக் கூடியவர். மேலும் அவ்வப்போது ஸ்பின் பவுலிங் போட்டு விக்கட்டுக்களையும் கைப்பற்றுவார். மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி தொடரில் இரண்டு சிறப்பான அரைசதம் அடித்து நல்ல பார்மில் உள்ளார்.

- Advertisement -

Jadhav-2

எனவே அவரை இனிவரும் ஆட்டங்களில் ஆட வைக்க ஹைதராபாத் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ள நிலையில், ஹைதராபாத் அணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரும் விஜயசங்கர் போல மோசமாக விளையாடுவார். அவரை எடுக்க வேண்டாம் என்று தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.