CSK : சி.எஸ்.கே அணிக்கு விழுந்த அடுத்த அடி. தொடர்ந்து வீரர்கள் காயத்தால் அவதி – விவரம் இதோ

தோனி தலைமையிலான சென்னை அணி தற்போது 14 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் வெற்றி மற்றும் 5 போட்டிகளில் தோல்வி என 18 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில்

Dhoni
- Advertisement -

தோனி தலைமையிலான சென்னை அணி தற்போது 14 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் வெற்றி மற்றும் 5 போட்டிகளில் தோல்வி என 18 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடம் பெற்று பிளேஆப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

CSKShop

- Advertisement -

புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், இரண்டாவது இடத்தில் இருக்கும் தோனி தலைமையிலான சென்னை அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. இந்நிலையில் சென்னை அணியில் மேலும் ஒருவீரர் காயம் காரணமாக இந்த தொடர் முழுவதும் விளையாடமாட்டார் என்று அணியின் பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்தார்.

இதுகுறித்து பிளமிங் கூறியதாவது : கடந்த போட்டியில் பீல்டிங் செய்யும்போது ஓவர்த்ரோ பந்தினை தடுக்க கீழே விழுந்த கேதார் ஜாதவ் தோள்பட்டை பகுதியில் காயமடைந்தார். காயம் பெரியதாக இல்லை என்றாலும் அவருக்கு சிகிச்சை அவசியம் என்று மருத்துவக்குழு அறிவித்ததால் தொடரில் எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் ஜாதவ் விளையாடமாட்டார்.

Kedar-Jadhav (1)

அதனால் ஜாதவ்க்கு பதிலாக முரளி விஜயை ஆடவைக்கும் திட்டம் உள்ளதாக பிளமிங் கூறினார். இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து சென்னை அணி வீரர்கள் பலர் காயமடைந்து வருவதால் சென்னை அணியின் ரசிகர்கள் நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று கலக்கத்தில் உள்ளனர்.

Advertisement