- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆதாரமற்ற குற்றச்சாட்டு.. சஞ்சு சாம்சனுக்கு சப்போர்ட் பண்ண போயி 3 ஆண்டுகள் தடை பெற்ற ஸ்ரீசாந்த் – என்ன நடந்தது?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீசாந்த் கடந்த 2013 ஐபிஎல் தொடரின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகையில் ஸ்பாட் பிக்சங்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் பல வருட போராட்டத்திற்கு பிறகு உச்ச நீதிமன்றம் வரை சென்று தான் நிரபராதி என்று உறுதி செய்த அவர் மீண்டும் தற்போது உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி விளையாடி வருகிறார்.

3 ஆண்டுகாலம் தடைபெற்ற கேரள வீரர் ஸ்ரீசாந்த் :

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து கேரளா அணிக்காக விளையாடி வரும் அவர் வெளிநாடுகளில் நடக்கும் முன்னாள் வீரர்கள் லீக் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீசாந்த் சக மாநில வீரனான சஞ்சீவ் சாம்சனுக்கு ஆதரவாக பேச சென்று தற்போது மூன்று ஆண்டுகள் கேரள கிரிக்கெட் வாரியத்தால் உள்நாட்டு போட்டிகளில் விளையாட தடை பெற்றுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் கடந்த ஆண்டு சஞ்சு சாம்சனை கேரள அணி நிர்வாகம் ஒதுக்கி வைத்ததால் தான் சஞ்சு சாம்சன் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் தேர்வை தவறவிட்டதாக அவர் கேரள கிரிக்கெட் வாரியத்தின் மீது ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

இதையடுத்து ஸ்ரீசாந்தின் இந்த கருத்தை ஏற்றுக் கொள்ளாத கேரள கிரிக்கெட் சங்கம் தங்கள் மாநில அணி நிர்வாகம் குறித்து தவறான மற்றும் அவதூறான அறிக்கையை தெரிவித்ததற்காக ஸ்ரீசாந்தினை 3 ஆண்டு காலம் இடைநீக்கம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

தனிநபர் இப்படி ஒரு கிரிக்கெட் வாரியம் குறித்து தவறான குற்றச்சாட்டை முன்வைத்தால் அது நல்லதல்ல என்ற கண்டனத்தையும் தெரிவித்து ஸ்ரீசாந்திற்கு இந்த தடையை அவர்கள் விதித்துள்ளனர். இந்திய அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீசாந்த் இப்படி பிரச்சினைகளில் சிக்குவது புதிது அல்ல.

இதையும் படிங்க : என்னையா ஏமாத்த பாக்குறீங்க.. அம்பயருடன் 2 முறை கோபமாக சண்டையிட்ட சுப்மன் கில்.. நடந்தது என்ன?

ஏனெனில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட அவர் கடந்த 2023 ஆம் ஆண்டு கூட தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கம்பீருடன் லெஜென்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் போது மைதானத்திலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதற்காகவும் நோட்டீசை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -