- Advertisement -
ஐ.பி.எல்

கூட்ட நெரிசலில் உயிரிழந்த 11 ரசிகர்களுக்கு மரியாதை அளிக்க கர்நாடக கிரிக்கெட் வாரியம் – எடுத்துள்ள முடிவு

கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்.சி.பி அணி கைப்பற்றி அசத்தியது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் வலுவான அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் ஆர்.சி.பி அணி ஏற்கனவே பலமுறை இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தாலும் ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை கைப்பற்றாமல் இருந்து வந்தது. இவ்வேளையில் கடந்த ஆண்டு நடைபெற்ற 18-வது ஐபிஎல் தொடரை ஆர்சிபி அணி கைப்பற்றியது.

ரசிகர்களை கவுரவப்படுத்த காத்திருக்கும் சின்னசாமி மைதானம் :

அந்த வெற்றி அணியின் வீரர்கள், நிர்வாகத்தினர் மத்தியில் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு 18 ஆண்டுகள் காத்திருப்பதற்குப் பிறகு கிடைத்த இந்த சாம்பியன் பட்டத்தினை ரசிகர்களும் கொண்டாடி தீர்த்தனர். அவ்வேளையில் ஆர்.சி.பி அணியின் வெற்றியை கொண்டாட தீர்மானித்து ரசிகர்களுக்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

- Advertisement -

அப்படி சின்னசாமி மைதானத்திற்கு வெளியே நடைபெற்ற அந்த கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். இதன் காரணமாக சில வழக்குகளையும் ஆர்.சி.பி அணி சந்தித்திருந்தது. பின்னர் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்க இருக்கிறது. இவ்வேளையில் ஆர்.சி.பி அணி உயிரிழந்த 11 ரசிகர்களை மரியாதை செலுத்தும் விதமாக ஒரு முடிவை எடுத்துள்ளது.

அதாவது இனி சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியாக இருந்தாலும் சரி, சர்வதேச போட்டியாக இருந்தாலும் சரி அந்த 11 ரசிகர்களின் அடையாளமாக 11 இருக்கைகள் காலியாக விடப்படும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து கர்நாடக கிரிக்கெட் வாரிய தலைவர் வெங்கடேஷ் பிரசாத் கூறுகையில் : இனி ஒவ்வொரு போட்டியிலும் 11 இருக்கைகளுக்கு ஓய்வு வழங்கப்பட்டு அந்த இருக்கைகள் எப்போதுமே காலியாக இருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : இப்படி விளையாடறதுக்கு பேசாம தோனி ரிட்டயர்டு ஆயிடலாம் – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

அது மட்டுமின்றி உயிரிழந்த 11 பேர் நினைவை போற்றும் விதமாக நாங்கள் அவர்களுக்காக நினைவு சின்னம் ஒன்றினையும் சின்னசாமி மைதானத்தில் வெளியே அமைக்க இருக்கிறோம். அதேபோன்று இந்த ஆண்டு துவங்க இருக்கும் ஐபிஎல் போட்டிகளின் முதலாவது ஆட்டத்தில் உயிரிழந்த 11 ரசிகர்களின் பெயர்களும் மைதானத்தில் திரையில் காட்டப்பட்டு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -