சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனிக்கு இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தான் கடைசி சீசன் என பலரும் பேசி வருகின்றனர். தற்போது 44 வயதான அவருக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக ஏற்கனவே சஞ்சு சாம்சனை சென்னை அணி டிரேடிங் செய்துள்ளது. இதனால் தோனிக்கு பிறகு சென்னை அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சன் தொடர்வார்.
இதுக்கு தோனி ஓய்வை அறிவித்து விடலாம் : ஆகாஷ் சோப்ரா
இதன் காரணமாக இந்த ஆண்டுடன் தோனி ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே முழங்கால் வலி காரணமாக விக்கெட் கீப்பிங் செய்யும் தோனி மிகுந்த சிரமத்தை சந்திக்கிறார். அதோடு பேட்டிங்கிலும் பின்வரிசையில் ஏழாவது, எட்டாவது இடத்தில் வந்து ஒரு சில பந்துகள் மட்டுமே பேட்டிங் செய்கிறார்.
அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் பெரும்பாலும் இம்பேக்ட் வீரராகவே விளையாடுவார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இம்பேக்ட் பிளேயராக விளையாடுவதற்கு அவர் ஓய்வை அறிவித்து விடலாம் என்று கடுமையான ஒரு விமர்சனத்தை இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா முன் வைத்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : கிரிக்கெட் ஒன்றும் கால்பந்து கிடையாது. மைதானத்திற்கு வெளியே உட்கார்ந்து கொண்டு அணியை வழிநடத்த முடியாது. தோனியின் மிகப்பெரிய பலமே மைதானத்தில் அவர் ஆட்டத்தை கணிக்கும் விதம்தான்.
இதையும் படிங்க : ஐ.பி.எல் போட்டிகளில் எனக்கு பிடிக்காத ஒரு ரூல்ஸ் இதுதான் – அக்சர் பட்டேல் கருத்து
அவர் இம்பேக்ட் பிளேயராக விளையாட வேண்டிய நிலை வந்தால் தானாக முன்வந்து ஓய்வை அறிவிப்பதே சரியான முடிவாக இருக்கும். விக்கெட் கீப்பிங் செய்ய சஞ்சு சாம்சன் தயாராக இருக்கிறார். எனவே தோனியின் கடைசி சீசன் இதுவாக இருக்கலாம் என்றும் ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.



