சன் ரைசர்ஸ் அணியுடன் வெற்றியை கொண்டாடிய இந்த பெண்மணி யார் தெரியுமா ? – சுவாரசிய தகவல் இதோ

Kavya-maran
Advertisement

ஐபிஎல் தொடரின் 11 வது லீக் போட்டி நேற்று டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணிக்கும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது.

srh

துவக்க வீரர்களான வார்னர் 45 ரன்களும், பேர்ஸ்டோ 53 ரன்கள் அடித்து சிறப்பான துவக்கம் அளித்தனர். அதன்பிறகு மனிஷ் பாண்டே வழக்கம்போல் 3 ரன்களில் ஏமாற்ற இந்த போட்டியில் முதல் முறையாக சேர்க்கப்பட்ட வில்லியம்சன் 26 பந்துகளில் 41 ரன்கள் குவித்து ரன் குவிப்புக்கு காரணமாக திகழ்ந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 162 ரன்கள் என்ற நல்ல ரன்களை குவித்தது.

- Advertisement -

அதன்பிறகு 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே அடித்தது. இதன் காரணமாக சன்ரைசர்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி சார்பாக தவான் 34 ரன்களும், ரிஷப் பண்ட் 28 ரன்களும் அடித்தனர். சன்ரைசர்ஸ் அணி சார்பாக ரசித்கான் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Kavya 1

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது சன் ரைசர்ஸ் அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் இணைந்த ஒரு பெண்மணியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவர் போது போட்டி நடைபெறும் போதும் அவரை பலமுறை கேமராவில் காண்பிப்பதன் காரணமாக இவர் யார் என்று பல கேள்விகள் சமூகவலைதளத்தில் எழுந்துள்ளன.

- Advertisement -

அதற்கான பதிலை நாங்கள் இந்த பதிவில் உங்களுக்காக தெளிவாக விளக்கி இருக்கிறோம். அதன்படி சன் ரைசர்ஸ் அணியுடன் இணைந்து இருக்கும் அந்த பெண்மணி தமிழகத்தைச் சேர்ந்த கலாநிதி மாறனின் (சன் குரூப்ஸ்) தலைவரின் மகள் ஆவார். இவரது தலைமையிலேயே சன்ரைசர்ஸ் அணி இருக்கிறது. சன் ரைசர்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ உரிமையாளர் காவியா மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

Kavya

ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொண்டு வீரர்களை தேர்வு செய்வது மட்டுமின்றி மைதானத்தில் வீரர்களுடன் இணைந்து அணியை உற்சாகப்படுத்தும் இது வழக்கமாக கொண்டுள்ளார். எனவே அவர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல் தொடரில் அணியுடன் இவர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement