முதல் டெஸ்டில் இவரை ஏன் சேர்க்கவில்லை. எனக்கு அதிர்ச்சியாகவும், வியப்பாகவும் உள்ளது -கவாஸ்கர்

Sunil-gavaskar
- Advertisement -

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நேற்று துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்தது.

ashwin 2

- Advertisement -

இந்த போட்டியில் அனுபவ வீரர்களான அஸ்வின், ரோகித் சர்மா மற்றும் சஹா ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. மேலும் குல்தீப் யதாவிற்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா அணியில் இடம் பிடித்தார். ரோகித்க்கு பதிலாக அனுமா விஹாரி இடம் பிடித்தார்.

இந்நிலையில் ஆடும் லெவனில் அஷ்வின் இடம் பெறாததற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஏனென்றால் கடந்த முறை வெஸ்ட் இண்டீஸ்-இல் நடந்த தொடரில் தொடர் நாயகன் விருது பெற்றவர் அஸ்வின். பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் கலக்கினார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 11 போட்டிகளில் 552 ரன்கள் சேர்த்துள்ளார் இதில் 4 சதங்களும், 60 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ashwin bat

இந்நிலையில் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது கருத்துக்களை கூறியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது : பல சாதனைகளை வைத்திருக்கம் அஷ்வின் குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிறப்பான சாதனை படைத்திருக்கிறார். இந்நிலையில் அஸ்வினுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காதது எனக்கு அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என்று கவஸ்கர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

Advertisement