அடப்பாவி என்னதான் இருந்தாலும் இப்படியா பண்ணுவ – இலங்கை வீரரின் மோசமான டி20 சாதனை

Rajitha
- Advertisement -

இலங்கை கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று அடிலெய்ட் மைதானத்தில் நடந்தது.

Rajitha 2

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி இலங்கை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து 2 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் வார்னர் சதம் அடித்து அசத்தினார். மேலும் பின்ச் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் அதிரடியாக விளையாடி இலங்கை அணிக்கு எதிராக பெரிய இலக்கை நிர்ணயிக்க உதவினர்.

பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் இந்த டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி ஒரு வெற்றி உடன் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Rajitha 1

இந்நிலையில் இந்த போட்டியில் இலங்கை அணியை சேர்ந்த பந்து வீச்சாளரான கசுன் ரஞ்சிதா 4 ஓவர்கள் வீசி 75 ரன்கள் விட்டுக்கொடுத்து டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த வீரர் என்கிற மிகமோசமான சாதனையை படைத்துள்ளார். அவர் கிட்டத்தட்ட ஒரு ஓவருக்கு 19 ரன்கள் வீதம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement