டூபிளெஸ்ஸிஸ் மும்பை அணிக்கு எதிராக விளையாடுவாரா ? மாட்டாரா ? – விவரம் இதோ

- Advertisement -

இந்தியாவில் துவங்கி நடைபெற்ற 14-வது ஐபிஎல் தொடரானது வீரர்களிடையே ஏற்பட்ட கொரோனா பாதிப்பினால் பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு தற்போது மீதமுள்ள 31 போட்டிகள் கொண்ட இரண்டாவது பாதி தொடரானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

CSKvsMI

- Advertisement -

நாளை துவங்க இருக்கும் இந்த முதல் போட்டியில் சென்னை அணியின் நட்சத்திர துவக்க வீரரான டூபிளெஸ்ஸிஸ் விளையாடுவாரா ? என்பது சந்தேகமாக உள்ளது. ஏனெனில் அண்மையில் நடைபெற்ற கரீபியன் லீக் தொடரில் அவர் விளையாடிய போது தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் விளையாடாமல் இருந்தார்.

இதன் காரணமாக தற்போது ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாடுவது சந்தேகம் என்ற நிலையில் அவர் சில தினங்களுக்கு முன்னர் துபாய் வந்து சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார். அதனால் அவர் நிச்சயம் சென்னை அணியில் விளையாட வாய்ப்பு உள்ளது என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் தற்போது டூபிளெஸ்ஸிஸ் காயம் குறித்த முக்கியமான தகவல் ஒன்றினை சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Faf

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தற்போது டூபிளெஸ்ஸிஸ் குவாரன்டைனில் உள்ளார். அது முடிந்தவுடன் அவரது உடல் திறன் குறித்த முழுமையான பரிசோதனை நடைபெறும். அந்த பரிசோதனைக்கு பிறகு தான் ஒரு முடிவுக்கு வரமுடியும்.

இருந்தாலும் கவலை ஏதும் படத் தேவையில்லை என்று டூபிளெஸ்ஸிஸ் கூறியுள்ளதால் நிச்சயம் அவர் முதல் போட்டியை தவற விட்டாலும் அடுத்த சில தினங்களில் அடுத்து வரும் போட்டிகளுக்கு தயாராகி விடுவார் என்று தோன்றுவதாக அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement