- Advertisement -
ஐ.பி.எல்

அடுத்த 2025-ஆம் ஆண்டு ஐ.பி.எல் குறித்த தோனியின் முடிவு என்ன? – சி.எஸ்.கே அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன்

சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் 17 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கேப்டன் பதவியில் இருந்து விலகி முழுநேர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி இருந்தார். கடந்த ஆண்டு சென்னை அணி கோப்பையை கைப்பற்றிய போதே தோனி ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அவ்வேளையில் ரசிகர்களின் அன்பிற்காகவும், பாசத்திற்காகவும் தான் 2024-ஆம் ஆண்டு சீதனில் விளையாடிவிட்டு தான் ஓய்வு பெறுவேன் அதுவும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் என்னுடைய கடைசி போட்டி இருக்கும் என்றெல்லாம் கூறியிருந்தார்.

- Advertisement -

அதன் காரணமாக இந்த ஆண்டு நிச்சயம் தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னை அணி கடைசியாக பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோல்வியை சந்தித்து பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பையும் இழந்து இந்த தொடரில் இருந்து வெளியேறியது.

இதன் காரணமாக தோனிக்கு அதுதான் கடைசி போட்டி என்ற கருத்தும் பரவி வருகிறது. இந்நிலையில் தோனியின் எதிர்காலம் என்ன? என்பது குறித்து சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : பெங்களூரு அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு தோனி மிகவும் ஏமாற்றத்துடன் காணப்பட்டார்.

- Advertisement -

நாங்கள் அவர் மீண்டும் விளையாட வேண்டும் என்று விரும்புகிறோம். தற்போது வரை தோனி தன்னுடைய அடுத்த திட்டம் என்ன? எதிர்காலம் என்ன? என்பது குறித்த எந்த ஒரு தகவலையும் அணி நிர்வாகத்திடம் தெரிவிக்கவில்லை. அதே போன்று நாங்களும் அவரிடம் அடுத்த திட்டத்தை குறித்து பேசப்போவதில்லை. அவரே முடிவு செய்ய அனுமதி அளிப்போம்.

இதையும் படிங்க : சச்சின், கங்குலி மாதிரி விராட், ரோஹித் செஞ்சுருக்கனும்.. இந்தியா உ.கோ ஜெயிக்கிறது கஷ்டம்.. உத்தப்பா கருத்து

நிச்சயம் தோனி நிதானமாக முடிவெடுத்து எங்களுக்கு தெரிவிப்பார் என்றும் காசி விஸ்வநாதன் கூறினார். அவர் கூறியதை வைத்து பார்க்கையில் தோனி இதுவரை தன்னுடைய அடுத்த சீசன் குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் நிச்சயம் அடுத்த ஆண்டு ஒரு சில போட்டிகளில் விளையாடிட்டு சென்னை மைதானத்தில் தான் ஓய்வு பெறுவார் என்றும் தெரிகிறது.

- Advertisement -