இந்தியாவில் அடுத்த ஆண்டு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது நவம்பர் மாதம் நடைபெற இருப்பதினால் அக்டோபர் 31-ம் தேதிக்குள் 10 அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே ஐபிஎல் நிர்வாகம் அனைத்து அணிகளுக்கும் கெடு விதித்திருந்தது.
தோனி நிச்சயம் ஓகே சொல்வார் :
இதன் காரணமாக தற்போது அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை தயார்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சென்னை அணியும் தற்போது எந்தெந்த வீரர்களை தக்க வைக்கலாம் என்பது குறித்த இறுதி முடிவை எடுக்க காத்திருக்கிறது.
இந்நிலையில் தற்போது 43 வயதாகும் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி அடுத்த ஆண்டு விளையாடுவாரா? மாட்டாரா? என்பது தான் பலரது கேள்வியாகவும் இருந்து வந்தது. இந்நிலையில் அண்மையில் வெளியான ஒரு பேட்டியில் பேசியதிலிருந்து தோனி தனது இறுதிகால கிரிக்கெட் கட்டத்தை மகிழ்ச்சியுடன் விளையாட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மகேந்திர சிங் தோனி மீண்டும் மற்றொரு ஆண்டு விளையாடுவார் என்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள சி.எஸ்.கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறுகையில் :
தோனி விளையாட தயாராக இருக்கிறார் என்று சொல்வதைவிட வேறு என்ன மகிழ்ச்சி வேண்டும். அவர் இன்னும் சில ஆண்டுகள் விளையாட விரும்பினால் அதில் எங்களுக்கு முழு விருப்பம் தான். தோனி அக்டோபர் 28 அல்லது 29-ஆம் தேதிக்குள் ராஞ்சி திரும்பி விடுவார் அப்போது நாங்கள் அவருடன் பேச இருக்கிறோம். தோனி எப்போதுமே சிஎஸ்கே அணியின் மீது அக்கறை கொண்டவர்.
இதையும் படிங்க : 3, 5 உட்பட எல்லாரும் மாறிட்டாங்க.. இந்தியாவுக்கு புஜாரா மாதிரி ஒருத்தர் தேவை.. ஆகாஷ் சோப்ரா கவலை
உரிமையாளர் ஸ்ரீனிவாசன் மீதும் அதிக மதிப்பு வைத்திருக்கிறார். அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதனை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். நிச்சயம் தோனி அடுத்த ஆண்டு விளையாடுவார் என்று உறுதியாக நம்புகிறேன். அவரை நாங்கள் நிச்சயம் தக்க வைப்போம் என காசி விஸ்வநாதன் கூறியது குறிப்பிடத்தக்கது.



