- Advertisement -
ஐ.பி.எல்

நீங்க அதிருப்தியா இருப்பீங்கனு தெரியும்.. ஆனா வலுவான கம்பேக் கொடுப்போம் – ரசிகர்களுக்கு ஆறுதல் கூறிய காசி விஸ்வநாதன்

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரானது மோசமான தொடராக மாறியுள்ளது. ஏனெனில் இதுவரை நடைபெற்ற 8 போட்டிகளில் இரண்டு வெற்றி மற்றும் ஆறு தோல்வி என புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கும் சிஎஸ்கே இந்த ஆண்டு பிளே ஆப் சுற்று வாய்ப்பை தவறவிட உள்ளது.

சி.எஸ்.கே அணி வலுவான கம்பேக் கொடுக்கும் : காசி விஸ்வநாதன்

இன்னும் எஞ்சியுள்ள ஆறு போட்டிகளில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் ஒரு வாய்ப்பு இருக்கும் வேளையில் அது நிச்சயம் நடக்காது என்றும் சிஎஸ்கே அணி அடுத்த ஆறு போட்டியில் பல போட்டிகளில் தோற்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதன் காரணமாக இந்த ஆண்டு ப்ளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. சென்னை அணி அடுத்ததாக ஹைதராபாத் அணிக்கு எதிராக ஏப்ரல் 25-ஆம் தேதி விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டு சரிவை சந்தித்த சிஎஸ்கே நிச்சயம் மீண்டும் வரும் என்று அந்த அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் ஆட்டத்தால் நீங்கள் அதிருப்தியில் இருப்பீர்கள் என்பதை உணர முடிகிறது. ஆனால் விளையாட்டில் இது சகஜம். இந்த ஆண்டு நமக்கு சரியாக அமையவில்லை அது உண்மைதான். ஆனால் நிச்சயம் சிஎஸ்கே மீண்டும் வலுவாக திரும்பும்.

- Advertisement -

இனிவரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று வீரர்கள் உறுதியாக உள்ளனர். கண்டிப்பாக சிஎஸ்கே பழைய பலத்துடன் கம்பேக் கொடுக்கும் என்றும் இனியும் ரசிகர்கள் தங்களது ஆதரவை தொடர்ந்து நமது அணிக்கு வழங்க வேண்டும் என காசி விஸ்வநாதன் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சுப்மன் கில் கேப்டனாக செய்யும் இந்த விடயங்கள் சூப்பரா இருக்கு – சுரேஷ் ரெய்னா புகழாரம்

இந்த சீஸனின் ஆரம்பத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் விளையாடிய சி.எஸ்.கே அணியானது அவரது விலகலுக்கு பிறகு தற்போது தோனி தலைமையில் விளையாடி வரும் வேளையில் தற்போதும் தொடர் தோல்விகளை சந்தித்து வருவது அனைவரது மத்தியிலும் விமர்சிக்கப்படும் விடயமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -