- Advertisement -
ஐ.பி.எல்

அந்த நாள் வரைக்கும் தோனி சிஎஸ்கே அணிக்காக ஆடுவாரு.. 5 ரிட்டன்சன் பற்றி விஸ்வநாதன் பேட்டி

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 கோப்பைகளை வென்று கொடுத்த எம்எஸ் தோனியை ஸ்பெஷல் விதிமுறை பயன்படுத்திய நான்கு கோடிக்கு தக்க வைத்துள்ளது.

மேலும் கேப்டன் ருதுராஜ், துபே, ஜடேஜா, பதிரனா ஆகியோரையும் சென்னை நிர்வாகம் தக்க வைத்துள்ளது. அதனால் 2025 சீசனில் தோனி விளையாடுவது உறுதியாகியுள்ளதால் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக தம்மை தல என்று கொண்டாடும் சிஎஸ்கே ரசிகர்களுக்காக தமது கேரியரின் கடைசி போட்டி சென்னையில் தான் நடைபெறும் என்று ஒரு முறை தோனி கூறியிருந்தார்.

- Advertisement -

சென்னையும் தோனியும்:

எனவே அந்த நாள் வரை தோனி சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார் என்று தலைமை நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “தோனியை பொறுத்த வரை அவர் அனைத்தையும் தமக்குள் வைத்திருப்பார் என்பது உங்களுக்கு தெரியும். அது கடைசி தருணத்தில் தான் வெளியே வரும். சிஎஸ்கே அணி மீதான அவருடைய ஆர்வம் பற்றியும் நமக்கு தெரியும்”

“சிஎஸ்கே ரசிகர்கள் தன்னை பின்பற்றுவதை அறிந்த அவர் தன்னுடைய கடைசிப் போட்டியை சென்னையில் தான் விளையாடுவேன் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதன் படி நாங்கள் சிஎஸ்கே அணிக்காக அவர் தொடர்ந்து விளையாடுவார் என்று நம்புகிறோம். தோனி விளையாட விரும்பும் வரை சென்னை அணியில் அவருக்கான கதவு திறந்திருக்கும்”

- Advertisement -

சிஎஸ்கே ரிட்டன்சன்:

“அவருடைய அர்ப்பணிப்பு மற்றும் கமெண்ட்மெண்ட் நமக்கு தெரியும். எனவே அவர் சரியான முடிவையே எடுத்திருப்பார் என்று நான் சொல்வேன். தங்களுடைய முதன்மை வீரர்களை சிஎஸ்கே அணி எப்போதும் தக்க வைக்கும் கலாச்சாரத்தை கொண்டுள்ளது. ஆரம்பத்தில் அது பற்றி ருதுராஜ், தோனி, பிளெமிங் ஆகியோருடன் விவாதித்தோம். கடந்த வருடங்களில் அணி வளர்வதற்கு முக்கிய பங்காற்றியவர்களை மீண்டும் தக்க வைக்க வேண்டும் என்பதை அப்போது நாங்கள் முடிவெடுத்தோம்”

இதையும் படிங்க: கேஎல் ராகுலை காப்பாத்த பாக்குறீங்களா? அவருக்கு இதுவே அதிகம்.. இந்திய அணியை விமர்சித்த சஞ்சய் மஞ்ரேக்கர்

“எனவே சிஎஸ்கே அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதில் முக்கிய பங்காற்றிய ஜடேஜா, ருதுராஜ் ஆகியோரை தக்க வைத்தது எளிது. தோனி பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லை. துபே சிஎஸ்கே, தோனியால் வளர்ந்தார். பதிரனா எந்த அணிக்கு போனாலும் உபயோகமான பவுலராக இருப்பார் என்பதால் அவரையும் தக்க வைத்தோம்” என்று கூறினார்.

- Advertisement -