NZ vs SL : இவ்வளவு மோசமாக நாங்கள் பேட்டிங் செய்து தோற்க இதுவே காரணம் – கருணரத்னே பேட்டி

உலக கோப்பை தொடரின் மூன்றாவது போட்டி நேற்று வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும் கார்டிப் மைதானத்தில்

Karunaratne
- Advertisement -

உலக கோப்பை தொடரின் மூன்றாவது போட்டி நேற்று வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும் கார்டிப் மைதானத்தில் மோதின.

Nz

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச தேர்வு செய்தார். அதன்படி முதலில் இலங்கை அணி பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் துவக்க வீரர் ஆன திரிமன்னே 4 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி அளிக்க பிறகு வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களிலேயே வெளியேறிக் கொண்டிருந்தனர்.

இதனால் இலங்கை அணி 29.2 அவர்களுக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிறகு 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 16.1 ஓவர்களில் விக்கெட் இழக்காமல் வெற்றி அடைந்தது. குப்தில் 73 ரன்களுடனும், மூன்ரோ 58 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Sl

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய கருணரத்னே கூறியதாவது : இந்த மைதானத்தில் 137 ரன்கள் என்ற இலக்கை போதுமானது கிடையாது. ஏனென்றால், இந்த மைதானத்தில் எவ்வளவு ரன்களாக இருந்தாலும் எளிதாக எட்டக்கூடிய பேட்டிங் மைதானமாக இது உள்ளது. மேலும் நானும் குஷால் பெரேராவும் சிறப்பாக பேட்டிங் செய்தோம். ஆனால் அடுத்தடுத்து சொற்ப இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால் எங்களால் பெரிய இலக்கை அமைக்க முடியவில்லை. அதுவே நாங்கள் குறைந்த ரன்கள் அடிக்க காரணமாக கருதுகிறேன்.

மேலும் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். பயிற்சிப் போட்டியில் நாங்கள் சிறப்பாக இருந்தாலும் இந்த தொடரில் நாங்கள் பேட்டிங்கில் மேம்பட்டு வர சில ரிஸ்க்கான ஷாட்களை ஆடும்போது மைதானத்தின் தன்மையைப் புரிந்து அதற்கு ஏற்றவாறு ஆட வேண்டும் என்று நீங்கள் கற்றுக் கொண்டோம். எனவே இனிவரும் போட்டிகளில் சிறப்பாக ஆடுவோம் என்று கருணரத்னே கூறினார்.

Advertisement