AUS vs SL : சிறப்பான துவக்கம் இருந்தும் நாங்கள் தோற்க இதுவே காரணம்- கருணரத்னே வருத்தம்

உலக கோப்பை தொடரின் 20 ஆவது போட்டி நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், கருணரத்னே தலைமையிலான இலங்கை

Karunaratne
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 20 ஆவது போட்டி நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும் மோதின.

aus

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 334 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் பின்ச் 153 ரன்கள் எடுத்தார். ஸ்மித் 73 ரன்களை அடித்தார். அதன் பின்னர் 335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடியது இலங்கை அணி.

- Advertisement -

45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 247 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மிட்சல் ஸ்டார்க் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிறப்பாக விளையாடி சதம் அடித்த பின்ச் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Finch

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே கூறியதாவது : இந்த மைதானம் பேட்டிங் செய்வதற்கு நன்றாகவே ஒத்துழைத்தது. நாங்கள் முதல் 25 ஓவர்கள் நன்றாகவே பந்துவீசினோம். அதன்பிறகு பின்ச் மற்றும் ஸ்மித் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி அணியின் நிலைமையை மாற்றி விட்டனர். நாங்களும் துவக்கத்தில் சிறப்பாக பேட்டிங் செய்தோம்.

Starc

அதன்பிறகு மிடில் ஆர்டரில் அதனை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. நல்ல துவக்கம் அமைந்தும் அதனை பெரிதாக எடுத்துச் செல்ல முடியவில்லை அதற்கு காரணம் ஆஸ்திரேலிய பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சுதான். தரமான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பேட்டிங் செய்யும்போது ரன்கள் எடுப்பதில் கடினம் ஏற்படுகிறது இது தான் உண்மை. நாங்கள் மழையினால் இரண்டு போட்டிகளை தவறவிட்டோம். இப்போது அடுத்துவரும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெறுவது அவசியம் அப்போது மட்டுமே எங்களால் top 4 இடங்களுக்குள் வரமுடியும் என்று கருணரத்னே கூறினார்.

Advertisement