NZ vs SL : 136 ரன்களுக்கு படுமோசமாக விளையாடி சுருண்ட இலங்கை – விவரம் இதோ

உலக கோப்பை தொடரின் மூன்றாவது போட்டி இன்று வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும் கார்டிப் மைதானத்தில் மோது

Karunaratne
- Advertisement -

உலக கோப்பை தொடரின் மூன்றாவது போட்டி இன்று வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும் கார்டிப் மைதானத்தில் மோதுகின்றன.

Nz

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச தேர்வு செய்தார். அதன்படி முதலில் இலங்கை அணி பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் துவக்க வீரர் ஆன திரிமன்னே 4 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி அளிக்க பிறகு வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களிலேயே வெளியேறிக் கொண்டிருந்தனர்.

- Advertisement -

இதனால் இலங்கை அணி 29.2 அவர்களுக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி இந்த போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ஆனால் குறிப்பிடத்தக்க விஷயம் என்று அந்த அணியின் கேப்டன் கருணரத்னே துவக்க வீரராக இறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 52 ரன்களை குவித்து இறுதிவரை களத்தில் இருந்தார்.

Sl

அவரது போராட்டம் கடைசிவரை இருந்தும் அவருக்கு உறுதுணையாக விளையாட வீரர் இல்லாததால் அவருடைய போராட்டம் வீணானது. இவ்வளவு குறைவான ரன்கள் எடுத்த போதிலும் அந்த அணியின் கேப்டன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து புதிய சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement