WI vs SL : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இவரின் சிறப்பான ஆட்டத்தாலே எங்கள் அணி வெற்றி பெற்றது – கருணரத்னே

உலகக் கோப்பைத் தொடரின் 39வது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின

Karunaratne
- Advertisement -

உலகக் கோப்பைத் தொடரின் 39வது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின.

wi vs sl

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அவிஷ்கா பெர்னாண்டோ 104 ரன்கள் எடுத்தார். குஷால் பெரரா 64 ரன்கள் எடுத்தார்.

அதன் பிறகு 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 315 ரன்கள் குவித்தது. இதனால் இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணி சார்பாக மலிங்கா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக நிக்கோலஸ் பூரான் 118 ரன்கள் குவித்தார்.

Avishka

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே கூறியதாவது : இந்த வெற்றி எங்களுக்கு நல்ல ஒன்றாகும். எங்களுக்கு இந்த வெற்றி அதிக தன்னம்பிக்கை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஒரு கேப்டனாக நான் எதை எதிர் பார்த்தேனோ அதனை வீரர்கள் இன்று செய்து காட்டினார்கள். இன்றைய போட்டியில் மிடில் ஆர்டரில் பேட்டிங் சிறப்பாக இருந்தது.

pooran

அவிஸ்கா அவருடைய சிறந்த இன்னிங்சை இன்று விளையாடினார். வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் சிக்சர்களை எளிதாக அடிக்கும் அணி என்று எங்களுக்கு தெரியும். அதனால் அவர்களை கட்டுக்குள் வைக்க நாங்கள் முயற்சித்தோம் அதை கடைசிவரை செய்தோம். ஆனால் இருப்பினும் பூரான் சிறப்பாக ஆடினார் அவரது விக்கெட் ஆட்டத்தை எங்களிடம் மாற்றியது. அதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வாய்ப்பு இருந்ததாகவே நான் கருதுகிறேன். முடிவில் இந்த வெற்றி எங்களுக்கு சிறந்த வெற்றியாகும் என்று கருணரத்னே கூறினார்.

Advertisement