ENG vs SL : இவரது விக்கெட்டை வீழ்த்தியதே இங்கிலாந்து அணியை வீழ்த்த வழி வகுத்தது – கருணரத்னே

உலக கோப்பை தொடரின் 27 வது போட்டி நேற்று லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து

Karunaratne
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 27 வது போட்டி நேற்று லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.

eng-v-sl

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இலங்கை அணி. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 232 இரண்டு அடித்தது அதிகபட்சமாக மேத்யூஸ் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

பிறகு 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 47 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டோக்ஸ் 82 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் மலிங்கா சிறப்பாக பந்துவீசி 10 ஓவர்களுக்கு 43 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

malinga

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே கூறியதாவது : இந்த போட்டி மிகவும் நெருக்கமான ஒன்று. சில நேரங்களில் அழுத்தத்தில் விளையாடும் பொழுது முடிவு எப்படி வேண்டுமானாலும் அமையும் ஆனால் இந்த போட்டியில் நாங்களே ஆதிக்கம் செலுத்தினோம். இன்றைய நாள் முடிவில் எங்களது அணி வீரர்கள் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என மூன்றிலும் சிறந்து விளங்கினர்.

stokes

இந்த மைதானம் பேட்டிங் செய்யும் பொழுது மெதுவாக இருந்தது. இதனால் எங்களால் 300 ரன்களை அடிக்க முடியாது என்று தெரிந்தது. ஆனால் நாங்கள் 250 முதல் 275 ரன்கள் வரை எடுக்க நினைத்தோம். மேத்யூஸ் சிறப்பாக பேட்டிங் செய்தார் அதேபோன்று மலிங்கா சிறப்பாக பந்துவீசி எங்கள் அணிக்கு வெற்றியை தேடி தந்தார். ஒரு அணியின் கேப்டனாக இது போன்ற சிறப்பான ஆட்டத்தையே நான் எதிர்பார்க்கிறேன். இந்த போட்டியில் ரூட் விக்கெட்டை நாங்கள் வீழ்த்தியதுதான் இந்த போட்டியில் பெரிய திருப்புமுனையாக நாங்கள் கருதுகிறோம் என்று கருணரத்னே கூறினார்.

Advertisement