- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கருண் நாயரின் கரியரையும் முடித்துவைத்த அஜித் அகார்கர்.. இனி சேன்ஸ் கிடைப்பது கஷ்டம் தான் – விவரம் இதோ

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான கருண் நாயர் உள்ளூர் போட்டிகளில் மலை போல் ரன்களை குவித்து 9 ஆண்டுகள் கழித்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு திரும்பியிருந்தார். அந்த வகையில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம் பிடித்திருந்த கருண் நாயருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்பட்ட வேளையில் அந்த வாய்ப்பினை பயன்படுத்த தவறிய கருண் நாயர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதோடு இங்கிலாந்து தொடரில் ஒட்டுமொத்தமாகவே அவர் ஒரு அரைசதம் மட்டுமே அடித்ததால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்ததோடு நிர்வாகத்தின் மத்தியிலும் அவர் மீதிருந்த நம்பிக்கை பறிபோனது.

கருண் நாயரின் கரியரை முடித்து வைத்த அஜித் அகார்கர் :

இதன் காரணமாக அவர் விளையாடி வந்த மூன்றாவது இடத்தில் தமிழக இளம் வீரரான சாய் சுதர்சன் தற்போது விளையாடி வருகிறார். இங்கிலாந்து தொடரில் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் அடுத்ததாக இந்திய மண்ணில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் மூன்றாவது வீரர் இடத்தில் களமிறங்கி விளையாடினார். இதன் காரணமாக இனியும் தொடர்ந்து சாய் சுதர்ஷன் தான் இந்திய டெஸ்ட் அணியின் மூன்றாம் இடத்தில் விளையாடுவார் என்று தெரிகிறது.

- Advertisement -

இந்நிலையில் டெஸ்ட் அணியில் தான் இழந்த வாய்ப்பை மீட்டெடுக்கும் வகையில் உள்ளூர் போட்டிகளில் மீண்டும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த துவங்கிய கருண் நாயர் அண்மையில் நடைபெற்ற ரஞ்சி தொடரில் சௌராஷ்ட்ரா அணிக்கு எதிராக ஒரு அரைசதம் அடித்ததோடு மட்டுமின்றி கோவா அணிக்கு எதிரான போட்டியின் போது 174 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர் கடைசியாக அவர் விளையாடிய கேரளா அணிக்கு எதிரான போட்டியிலும் 233 ரன்கள் அடித்து அசத்திய அவருக்கு மீண்டும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கருண் நாயரின் டெஸ்ட் கரியரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அஜித் அகார்கர் தற்போது மீண்டும் ஒரு முக்கிய முடிவை எடுத்து அதிரடியான அறிவிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் எதிர்வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் மீண்டும் சாய் சுதர்ஷனுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் கருண் நாயர் இந்திய அணியில் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் கருண் நாயருக்கு நிச்சயம் ஏமாற்றத்தை அளிக்கும் இருந்தாலும் தற்போது 33 வயதாகும் கருண் நாயரை தாண்டி இளம் வீரர்களுக்கு அந்த இடத்தில் வாய்ப்பளிக்கும் பட்சத்தில் அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு அவர்களால் தொடர்ச்சியாக இந்திய டெஸ்ட் அணியில் பயணிக்க முடியும் என்பதனாலே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : முடிவுக்கு வரும் முகமது ஷமியின் கிரிக்கெட் கரியர்.. மீண்டும் ஒருமுறை கிடைத்த ஏமாற்றம் – விவரம் இதோ

ஏற்கனவே கருண் நாயரின் நீக்கம் குறித்து பேசியிருந்த தேர்வுக்குழு தலைவரான அஜித் அகார்கர் கூறுகையில் : அவரிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் என்றும் ஆனால் எங்கள் எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்யவில்லை என்பதனாலே அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -