உலகின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் இவர்தான். ஆனால் அது கோலி இல்லை – கருண் நாயர் ஓபன் டாக்

Karun
- Advertisement -

இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி கடந்த 6 வருடமாக இருந்து வருகிறார். 2008 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக அவர் ஆடியும் வருகிறார். சமீபகாலமாக அவரது பேட்டிங் கிரிக்கெட்டின் உச்சத்திற்கே சென்று உள்ளது. தொடர்ந்து அனைத்து விதமான போட்டிகளிலும் பட்டையை கிளப்பி வருகிறார். குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் எப்போதும் தனது முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.

smith

- Advertisement -

டெஸ்ட் போட்டியில் இரண்டாம் இடத்தில் இருந்தாலும் அவ்வப்போது முதலிடத்தை பிடித்து அங்கும் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளார் விராட் கோலி. எப்படி இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் ஸ்டீவன் ஸ்மித் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்திருந்த கருண் நாயர் தற்போது உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் பற்றி பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்…

என்னை பொறுத்தவரை டெஸ்ட் போட்டிகளில் ஸ்டீவன் ஸ்மித் தான் உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன். அதேபோல் ஸ்டீவன் ஸ்மித், விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட் மற்றும் ஆகிய நான்கு வீரர்களுக்கு அடுத்தபடியாக தற்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இணைந்து இருக்கிறார்.

Smith
.
அவரும் அந்தப் பட்டியலில் இணைய தகுதியான வீரர்தான் என்று கூறியுள்ளார் கருன் நாயர். கடந்த 2016ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக விராட் கோலியின் தலைமையில் அறிமுகமான கருண் நாயர் முச்சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் இவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

Advertisement