இந்திய அணியில் கம்பேக் கனவு இன்னும் கலையல.. திடீர்னு அசத்த இது தான் காரணம்.. கருண் நாயர் பேட்டி

Karun Nair 3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்காக மீண்டும் விளையாடும் நோக்கத்துடன் கருண் நாயர் போராடி வருகிறார். 2016ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அவர் முச்சதத்தை அடித்து சாதனை படைத்தார். அதன் வாயிலாக வீரேந்திர சேவாக்கிற்கு நிகராக சாதனை படைத்த அவர் அதன் பின் சுமாராக விளையாடியதால் கழற்றி விடப்பட்டார்.

ஆனால் அதன் பின் 9 வருடங்கள் கடந்தும் இன்னும் அவருக்கு மறு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்காக மனம் தளராத அவர் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் போராடி வருகிறார். அதில் தற்போது 2025 விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அபாரமாக விளையாடும் அவர் 7 போட்டிகளில் 752 ரன்களை 752 என்ற சராசரியில் குவித்து அட்டகாசமாக விளையாடி வருகிறார்.

- Advertisement -

கம்பேக் போராட்டம்:

குறிப்பாக 6 முறை ஆட்டமிழக்காத அவர் 5 சதங்கள் அடித்து உச்சகட்ட ஃபார்மில் இருப்பதால் இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சில ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்திய அணியில் விளையாடும் கனவு இன்னும் கலையவில்லை என்று கருண் நாயர் தெரிவித்துள்ளார். கடினமாக உழைத்து வந்ததே தற்போது திடீரென அசத்தலாக விளையாட காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எப்போதும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே கனவு. எனவே அந்த கனவு இன்னும் உயிருடன் இருக்கிறது. நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே கிரிக்கெட்டில் விளையாட ஒரே காரணம். இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே என்னுடைய ஒரே இலக்கு. இது என்னுடைய 3வது கம்பேக் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

கனவு காத்திருப்பு:

“இப்போது செய்வதை நான் தொடர்ந்து செய்ய வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும் ரன்கள் குவிக்க வேண்டும். அது மட்டுமே என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. மீண்டும் இந்தியாவின் அணிக்காக தேர்வாகும் வரை அது கனவாகவே இருக்கும். அங்கே வரை நான் செல்லவில்லை. ஒரு நேரத்தில் ஒரு இன்னிங்ஸில் மட்டும் கவனம் செலுத்துகிறேன்”

இதையும் படிங்க: அதுக்கு கூட தகுதியில்லாம போய்ட்டாரா? பாண்டியாவை பிசிசிஐ ஏன் அவமானப்படுத்தியது தெரியல.. டிகே அதிருப்தி

“எதையும் நான் வித்தியாசமாக செய்யவில்லை. எனவே இதில் ரகசியம் எதுவுமில்லை. இத்தனை வருடங்களாக வெளிப்படுத்திய கடினமான உழைப்பு தற்போது ஒன்றாக வருகிறது என்று நினைக்கிறேன். என்னுடைய கேரியர் முடிந்ததாக நான் நினைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் நாம் புதிதாக ஜீரோவில் இருந்து மீண்டும் துவங்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். இப்படித்தான் சில வருடங்களாக வாழ்க்கை செல்கிறது” என்று கூறினார்.

Advertisement