அதுக்கு கூட தகுதியில்லாம போய்ட்டாரா? பாண்டியாவை பிசிசிஐ ஏன் அவமானப்படுத்தியது தெரியல.. டிகே அதிருப்தி

Dinesh Karthik 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக டி20 தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி விளையாடி வெற்றி காண்பதற்கு தயாராகி வருகிறது. அந்தத் தொடருக்கு அக்சர் பட்டேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அத்தொடரில் அக்சர் படேல் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஏன் என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக்கிடம் ரசிகர் கேள்வி எழுப்பினார்.

மேலும் ஹர்திக் பாண்டியா துணை கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டது ஏன் என்றும் ரசிகர் ஒருவர் கிரிக்பஸ் இணையத்தில் கேட்டார். அதற்கு உண்மையான காரணம் என்ன என்று தமக்கு தெரியவில்லை என்று தினேஷ் கார்த்திக் பதிலளித்துள்ளார். ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி நன்றாக செயல்பட்டதாக கார்த்திக் கூறியுள்ளார்.

- Advertisement -

கார்த்திக் குழப்பம்:

இது பற்றி தினேஷ் கார்த்திக் கூறியது பின்வருமாறு. “உண்மையாக எனக்கு தெரியவில்லை. ஹர்திக் பாண்டியா ஏன் துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்று எனக்குத் தெரியவில்லை. அதற்கான காரணம் எதுவும் இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவரது தலைமையில் இந்திய அணி நன்றாக விளையாடியது”

“அவர் துணைக் கேப்டனாக இருந்த இருதரப்பு தொடர்களிலும் இந்தியா வென்றுள்ளது. எனவே ஏன் பாண்டியா நீக்கப்பட்டார் என்பதற்கான அறிகுறி கூட எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார். முன்னதாக ஐபிஎல் 2022 கோப்பையை குஜராத் அணிக்காக வென்ற ஹர்திக் பாண்டியாவை பிசிசிஐ வெள்ளைப்பந்து இந்திய அணிகளின் வருங்கால கேப்டனாக தீர்மானித்தது.

- Advertisement -

கம்பீர் தான் காரணம்:

அதனால் 2022 டி20 உலகக் கோப்பைக்கு பின் ரோகித் இல்லாத தொடர்களில் பாண்டியா தலைமையில் விளையாடிய இந்தியா சில வெற்றிகளையும் பெற்றது. அது போக 2024 டி20 உலகக் கோப்பையில் துணை கேப்டனாக நன்றாக விளையாடிய பாண்டியா இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். அதன் காரணமாக ரோஹித் ஓய்வுக்கு பின் பாண்டியா புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: சாம்பியன்ஸ் ட்ராபியை விடுங்க.. 33 வயது கருண் நாயருக்கு இந்த வாய்ப்பை கொடுங்க.. பிரசாத் கோரிக்கை

ஆனால் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் சுமாரான ஃபிட்னஸ் காரணமாக பாண்டியா கேப்டன்ஷிப் செய்வதற்கு தகுதியற்றவர் என்று கருதினார். அதனால் அவரிடம் இருந்த துணை கேப்டன்ஷிப் பதவியையும் பறித்த அவர் சுப்மன் கில்லை துணை கேப்டனாக தேர்ந்தெடுத்தார். அந்த வகையில் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் கோப்பையை வென்றும் அவமானப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement