- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சாய் சுதர்சனால் கருண் நாயருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து.. கடைசி சேன்ஸ் இதுதான் – விவரம் இதோ

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன.

சாய் சுதர்சனால் கருண் நாயருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது நாளை ஜூலை 10-ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இந்திய அணி வீரர்கள் போட்டி நடைபெறும் லார்ட்ஸ் மைதானத்தில் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்த தொடரில் விளையாடி வரும் பெரும்பாலான இந்திய வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினாலும் 8 ஆண்டுகளுக்கு பிறகு அணிக்கு திரும்பிய கருண் நாயரின் செயல்பாடு சற்று சுமாராகவே உள்ளது. அதிலும் குறிப்பாக இதுவரை நடைபெற்றுள்ள இரண்டு போட்டிகளிலும் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்காத வேளையில் அவரது இடம் தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

ஒருவேளை அவர் அடுத்த மூன்றாவது போட்டியிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அவரை நீக்கிவிட்டு மூன்றாவது இடத்தில் சாய் சுதர்சனை களமிறக்கவும் வாய்ப்புள்ளது. அதன் காரணமாக கருண் நாயர் தற்போது மூன்றாவது போட்டிக்கு முன்னதாக தீவிர பயிற்சியை மேற்கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

நேற்று நடைபெற்ற வலைப்பயிற்சியில் விருப்பமானவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட வேளையில் கேப்டன் சுப்மன் கில், ரிஷப்மென்ட் போன்றோர் இந்த வலைப்பயிற்சியில் பங்கேற்கவில்லை. அதேபோன்று கே எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரும் பயிற்சி செய்யவில்லை. ஆனால் கருண் நாயர் மட்டும் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க : மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ராகுல் டிராவிடின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – சுப்மன் கில்

ஏனெனில் முதல் இரண்டு போட்டியிலே ஒரு அரைசதம் கூட அடிக்காத கருண் நாயர் இதுவரை இந்த இரண்டு டெஸ்ட் போட்டியிலும் சேர்த்து 74 ரன்கள் மட்டுமே குவித்துள்ளதால் மூன்றாவது போட்டியிலும் ஒருவேளை அவர் சொதப்பும் பட்சத்தில் அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது. இதன் காரணமாக தற்போது கருண் நாயர் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

- Advertisement -