கருண் நாயருக்கு டாட்டா.. வீணான 8 வருட கம்பேக்? தமிழக வீரரின் வாய்ப்பால் முடிவுக்கு வரும் கேரியர்

Karun Nair 2
- Advertisement -

கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் கருண் நாயர் உள்ளூரில் சிறப்பாக விளையாடி 2016ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமானார். ஒருநாள் கிரிக்கெட்டில் 2 போட்டிகளில் 46 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் அரை சதம் கூட அடிக்கவில்லை. இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் சேவாக்கிற்குப்பின் முச்சதம் அடித்து சாதனை படைத்த அவர் தொடர்ந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அந்தப் போட்டிக்கு பின் சீனியர்கள் வந்ததால் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே சமயம் கிடைத்த வாய்ப்புகளில் கருண் நாயரும் அசத்தவில்லை. அதனால் கழற்றி விடப்பட்ட அவர் மனம் தளராத உள்ளூரில் கர்நாடகாவிலிருந்து வெளியேறி விதர்ப்பா அணிக்காக விளையாடினார். அங்கே மிகச் சிறப்பாக விளையாடிய அவர் விதர்பா கோப்பையை வெல்ல உதவினார்.

- Advertisement -

வீணான கம்பேக்:

அத்துடன் விஜய் ஹசாரே கோப்பையில் 779 ரன்கள் அடித்து சாதனை படைத்த நாயர் இங்கிலாந்துக்கு சென்று கவுன்டி தொடரில் விளையாடி அசத்தினார். அப்படி தொடர்ச்சியாக அசத்தியதால் சமீபத்திய இங்கிலாந்து தொடரில் அவருக்கு தேர்வுக்குழு மீண்டும் வாய்ப்பு கொடுத்தது. அந்த வாய்ப்பில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 204 ரன்கள் அடித்த நாயர் முதன்மை போட்டிகளில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முதல் போட்டியிலேயே மிடில் ஆர்டரில் தடுமாறிய அவருக்காக தமிழக வீரர் சாய் சுதர்சனை அறிமுகப் போட்டியுடன் கழற்றி விட்ட இந்திய அணி 3வது இடத்தில் விளையாடும் வாய்ப்பு கொடுத்தது. அந்த வாய்ப்பிலும் சுமாராக விளையாடிய நாயர் லார்ட்ஸ் போட்டியில் பந்தை தவறாக படித்து விக்கெட்டை இழந்தது இந்தியாவின் தோல்விக்கு வித்திட்டது. அதனால் 4வது போட்டியில் கழற்றி விடப்பட்ட அவருக்கு மீண்டும் கடைசிப் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

முடியும் கேரியர்:

அந்த வாய்ப்பில் அரை சதத்தை மட்டுமே அடித்த கருண் நாயர் பெரிய ரன்கள் குவிக்கவில்லை. மொத்தத்தில் 8 வருடம் கழித்து கொடுத்த கம்பேக்கில் கிடைத்த வாய்ப்புகளை அவர் பயன்படுத்தவில்லை என்றே சொல்லலாம். இந்நிலையில் அடுத்ததாக செப்டம்பர் 16, 23 தேதிகளில் லக்னோவில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

இதையும் படிங்க: கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர்.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்.. ஆஸி தொடருக்கான இந்தியா ஏ அணி, அட்டவணை

அதில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா ஏ அணியில் கருண் நாயர் கழற்றி விடப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சாய் சுதர்சன், ஜெகதீசன், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் டாப் ஆர்டரில் விளையாட வாய்ப்பு பெற்றுள்ளார். அந்தப் போட்டிகளில் அசத்துபர்கள் வரும் அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள். இதிலிருந்து தேர்வுக்குழு கருண் நாயரை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கத் துவங்கியுள்ளது. அதனால் 35 வயதாகும் அவருடைய கேரியர் முடிவுக்கு வருவதாகவே பார்க்கப்படுகிறது.

Advertisement