கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர்.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்.. ஆஸி தொடருக்கான இந்தியா ஏ அணி, அட்டவணை

Shreyas Iyer
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடரில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்ட சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் கழற்றி விடப்பட்டது பலரையும் விமர்சிக்க வைத்தது. ஏனெனில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் குவித்த அவர் இந்தியா கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

அதற்கு முன் 2024 ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்ற அவர் 2025 சீசனில் 604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி பஞ்சாப்பை 11 வருடங்கள் கழித்து இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். அப்படிப்பட்ட அவருக்கு ஆசியக் கோப்பை ரிசர்வ் வீரர்கள் பட்டியல் கூட இடம் கிடைக்காதது ரசிகர்களை கோபமடைய வைத்தது. குறிப்பாக சுப்மன் கில்லை புதிய கேப்டனாக வளர்ப்பதற்காக ஸ்ரேயாஸ் கழற்றி விடப்பட்டதை பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

- Advertisement -

கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்:

இந்நிலையில் ஆஸ்திரேலியா ஏ லக்னோவில் இந்தியா ஏ அணி 2 உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2024 இங்கிலாந்து தொடருடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் கழற்றி விடப்பட்ட அவர் ஆஸ்திரேலியாவில் அசத்துவது அவசியமாகிறது.

அதை செய்தால் வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்தியாவுக்காக மீண்டும் ஸ்ரேயாஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்புள்ளது. அவருடைய தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தியா ஏ அணியில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் மற்றும் நாராயன் ஜெகதீசன் தேர்வாகியுள்ளனர். சமீபத்திய இங்கிலாந்து தொடரில் கம்பேக் கொடுத்த கருண் நாயர் சுமாராக விளையாடினார்.

- Advertisement -

இந்தியா ஏ அணி:

அதனால் அவரை கழற்றி விட்டுள்ள தேர்வு குழு சாய் சுதர்சனுக்கு வாய்ப்பளித்துள்ளது. அதே போல 2025 துலீப் கோப்பை செமி ஃபைனலில் 197 ரன்கள் அடித்த ஜெகதீசனுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் கேஎல் ராகுல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் 2வது போட்டியில் மட்டும் விளையாடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த 2 போட்டிகளும் வரும் செப்டம்பர் 16 மற்றும் 23ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

2025 ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்தியா ஏ அணி:
ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், நாராயன் ஜெகதீசன் (கீப்பர்), சாய் சுதர்சன், துருவ் ஜுரேல் (கீப்பர்), தேவ்தூத் படிக்கல், ஹர்ஷ் துபே, ஆயுஷ் படோனி, நிதிஷ் ரெட்டி, டானுஷ் கோட்டியான், பிரசித் கிருஷ்ணா, குர்நூர் ப்ரார், கலீல் அஹ்மத், மாணவ் சுதர், யாஷ் தாகூர், கேஎல் ராகுல்*, முகமது சிராஜ்*

Advertisement