IND vs PAK : மழைபெய்தால் கார்த்திக் 4 ஆவது வீரராக களமிறங்குவதை தடுக்க முடியாது

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று 16ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெறவுள்ளது. பொதுவாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் விறுவிறுப்பும்

karthik
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று 16ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெறவுள்ளது. பொதுவாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் விறுவிறுப்பும் பரபரப்பும் பஞ்சம் இருக்காது.

India v Pakistan

அதே போன்று இந்த தொடரிலும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி அதிக வரவேற்பினை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்காக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இன்றைய போட்டியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

பாதிக்கப்பட்ட நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நான்காவது வீரராக விஜய் சங்கர் இறங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் போட்டி நடைபெறாமல் போனதால் 4வது இடத்தில் யார் இறங்குவார்கள் என்பது தெரியாமலே போனது. இன்றைய போட்டியில் ராகுல் தொடக்க வீரராக நிச்சயம் களமிறங்குவார். நான்காவது இடத்தில் விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோரில் யாருக்கு இடம் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

shankar

அதற்கான விடை யாதெனில் மழையால் போட்டி இரண்டு மணி நேரத்திற்கு மேல் பாதிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. அவ்வாறு மழை பெய்து பிறகு போட்டி தொடங்கினால் நிச்சயம் தினேஷ் கார்த்திக்கே அணியில் இடம் பிடிப்பார். ஏனெனில் மழை பெய்து ஆட்டம் தாமதமாக தொடங்கினால் போட்டியின் ஓவர்கள் குறைக்கப்படும். அவ்வாறு ஓவர்கள் குறைக்கப்படும்போது விஜய் சங்கர் அவ்வளவு சிறப்பாக விளையாடும் வீரர் கிடையாது.

ஆனால் தினேஷ் கார்த்திக் பல ஆண்டு அனுபவம் உடையவர். மேலும் டி20 போட்டிகளில் வேகமாக ரன்களை குவிக்க கூடிய வீரர் என்பதால் அவரே இந்த போட்டியில் விளையாடுவார் என்று நம்பப்படுகிறது. மேலும் தினேஷ் கார்த்திக் போட்டியை சிறப்பாக முடித்து வைக்கும் திறமையும் வைத்துள்ளார் இதனால் தினேஷ் கார்த்திக் இடம் பெறுவது தவிர்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்றைய போட்டியில் விஜய் ஷங்கரை விட தினேஷ் கார்த்திகே களமிறங்குவார் என்று தெரிகிறது.

Advertisement