IND vs WI : நாளைய போட்டியில் விஜய் ஷங்கருக்கு பதிலாக இவரே ஆடுவார் – வெளியான தகவல்

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை

Vijay-Shankar
- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி நான்கு வெற்றிகளையும், நியூசிலாந்துடனான மழையால் நின்ற போட்டியில் ஒரு டிரா என 9 புள்ளிகளில் உள்ளது.

india

- Advertisement -

இந்திய அணி அடுத்ததாக 27ஆம் தேதி மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது. நாளை நடைபெற உள்ள போட்டிக்காக இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் நாளைய போட்டிக்கான இந்திய அணி குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இந்திய அணியில் தவான் காயம் காரணமாக விலகியதால் அவருக்கு பதிலாக விஜய்சங்கர் இந்திய அணியில் இணைந்து ஆடி வருகிறார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அவருடைய ஆட்டம் பேட்டிங்கில் திருப்திகரமாக இல்லை. இந்திய அணிக்கு அதிர்ச்சி தரும் விடயமாக உள்ளது. இதனால் தற்போது இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார். ஏனெனில் சர்வதேச அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் இது போன்ற மிகப்பெரிய தொடர்களில் பொறுப்பை உணர்ந்து ஆடுவார் என்பதால் அவர் தற்போது பேட்டிங் பயிற்சி செய்து வருகிறார்.

Karthik

தினேஷ் கார்த்திக்க்கு விஜய் சங்கர் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சேர்ந்த சைனி ஆகியோர் பந்துவீசி வருகின்றனர். இன்றைய நாள் முழுவதும் தினேஷ் கார்த்திக் பயிற்சியில் ஈடுபட்டதால் நாளைய போட்டியில் அவர் இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என்று நம்பப்படுகிறது. மேலும் விஜய் சங்கர் நாளைய போட்டியில் ஓய்வு கொடுத்துவிட்டு அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் இறங்குவார் என்ற நம்பத்தகுந்த தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement