மீண்டும் கொல்கத்தா அணியின் கேப்டன் பதவி தேடி வந்தால் ஓகே சொல்வீங்களா ? – தினேஷ் கார்த்திக் பதில்

Karthik

இந்தியாவில் துவங்கிய 14வது ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கு இடையே பரவிய கொரோனா வைரஸ் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. மேலும் மீதமுள்ள 31 போட்டிகள் எங்கு நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் பிசிசிஐ நடத்திய கூட்டத்தில் இந்த மீதமுள்ள 31 போட்டிகளும் செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான அதிகாரபூர்வ தகவலும் சமீபத்தில் வெளியானது.

IPL

மேலும் தற்போது இந்த ஐபிஎல் தொடருக்கான அட்டவணையும் கூடிய சீக்கிரம் அவர்கள் வெளியிட இருக்கின்றனர். இந்நிலையில் இந்த ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எஞ்சிய தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு அணிகளும் பல சிக்கல்களை சந்திக்க இருக்கிறது. அதிலும் குறிப்பாக கொல்கத்தா அணி கேப்டனாக மோர்கன் செயல்பட்டு வருவதால் அவர் இந்த எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க முடியாது.

- Advertisement -

இதன் காரணமாக அந்த அணிக்கு யார் கேப்டனாக நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் கேப்டனாக செயல்பட மற்றொரு வாய்ப்புடைய பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய வீரர் என்பதால் அவரும் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார். இந்நிலையில் இந்த கொல்கத்தா அணியை வழிநடத்தும் வாய்ப்பு வந்தால் என்ன செய்வீர்கள் ? என்ற கேள்விக்கு தற்போது தினேஷ் கார்த்திக் பதிலளித்துள்ளார்.

karthik 2

இதுகுறித்து அவர் கூறுகையில் : பேட் கம்மின்ஸ் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க மாட்டார் அதே போன்று மோர்கன் பங்கேற்பதும் இன்னும் உறுதியாகவில்லை. ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் மூன்று மாதங்கள் உள்ளதால் சூழ்நிலையைப் பொருத்து தான் மோர்கன் பங்கேற்பாரா ? இல்லையா ? என்பது தெரியவரும். ஒருவேளை அந்த சூழ்நிலையில் எனக்கு கேப்டன் பதவி தேடி வந்தால் நிச்சயம் நான் ஏற்றுக் கொள்வேன் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

- Advertisement -

Karthik

மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் : டி20 உலக கோப்பை தொடரில் என்னால் இந்திய அணிக்கு சிறந்த பினிஷராக செயல்பட முடியும். இந்திய அணியின் மிடில் ஆர்டரில் தற்போது ஒரு வெற்றிடம் உள்ளது அதனை நான் நிரப்ப முடியும் என நம்புகிறேன். இந்திய அணிக்கு தேர்வாக வயது முக்கியமல்ல உடற்பகுதி மட்டுமே முக்கியம். அந்த வகையில் நான் இந்திய அணிக்காக விளையாட காத்துக் கொண்டிருப்பதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement