அணி நிர்வாகம் என்னை இந்த இடத்தில் ஆட வைக்கவே விரும்புகிறது – தினேஷ் கார்த்திக்

Karthik
- Advertisement -

இன்றோடு உலக கோப்பையின் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைகின்றன. இன்றைய கடைசி இரண்டு லீக் ஆட்டங்களில் இந்தியா இலங்கை அணியுடனும், ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

Dhoni

இன்றைய போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை வெற்றிபெற்றாலும் சரி, தோற்றாலும் சரி இந்திய அணி அரையிறுதி போட்டியில் விளையாடுவது உறுதி. ஆனால் இலங்கையை இந்திய அணி வீழ்த்தினால் இந்திய அணி முதல் இடத்திற்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் வீரரான தினேஷ் கார்த்திக் தனது பேட்டிங் ஆர்டர் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணியில் நான் தற்போது இடம் பிடித்து விளையாடி வருகிறேன். அணி நிர்வாகம் என்னை 7 ஆவது இடத்தில் பேட்டிங் செய்யவே விரும்புகிறது. ஆனால் நான் சற்று முன்னால் இறங்கினால் என்னால் அதிகமான ரன்களை குவிக்க முடியும் என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.

Karthik

நடப்பு தொடரில் ஜாதவின் பேட்டிங் சற்று சொதப்பலாக இருந்த காரணத்தினால் அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் இடம்பிடித்து விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement