உங்களின் அருகில் இருப்பது பெருமையாக இருக்கிறது. வாழ்த்துக்களுக்கு நன்றி சார் – கவாஸ்கருக்கு நன்றி தெரிவித்த தினேஷ் கார்த்திக்

Gavaskar

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி வரும் 18ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிகரித்துள்ளது. இந்த போட்டியை ஒளிபரப்பும் உரிமையை ஸ்கை ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் வாங்கியுள்ளது.

INDvsNZ

இந்நிலையில் இந்த போட்டியை வர்ணனை செய்ய இந்திய வர்ணனையாளர்கள் யாரும் முனைப்பு காட்டாத நிலையில் கவாஸ்கர் இதில் வர்ணனை செய்ய ஒப்புக்கொண்டார். அது மட்டுமின்றி அவருடன் முதன்முறையாக தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகிறார். அதனால் தினேஷ் கார்த்திக்கும், சுனில் கவாஸ்கரும் தற்போது இங்கிலாந்து சென்று அங்கு இருந்தபடி சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

- Advertisement -

அதில் தினேஷ் கார்த்திக் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த கவாஸ்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டிற்காக அறிமுகம் ஆகும்போது நான் இந்திய அணிக்காக ஆலோசகராக இருந்தேன். தற்போது அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியின் மூலம் வர்ணனையாளராக அறிமுகமாகும் போதும் அவருடன் இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தினேஷ் கார்த்திக் இந்த வர்ணனை பணியை மிகச் சிறப்பாக செய்வார் என நம்புகிறேன் என்று அவர் பதிவிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கவாஸ்கர் பதிவிட்ட இந்த இன்ஸ்டாகிராம் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் கவாஸ்கர் பதிவிட்ட இந்த புகைப்படத்திற்கு முதல் ஆளாக கமென்ட் செய்த தினேஷ் கார்த்திக் குறிப்பிட்டதாவது : உங்கள் அருகில் இருப்பது எனக்கு பெருமை. உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி சார் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement