நடந்து வரும் ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கான கடைசி தகுதி போட்டி கடந்த மே25 ஆம் தேதி இரவு நடைபெற்றது. இதில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது ஹைதராபாத் அணி. இந்த போட்டியின் போது கொல்கதானியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் அவருடைய அணியில் இருந்த ப்ரஸீத் கிருஷ்ணாவை திட்டிய வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை(மே 25 ) இரவு கொல்கத்தா ஹெடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக யாரும் 35 ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை.
இதன் பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 வர்கள் முடிவில் 160 ரன்களை எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இந்த போட்டிக்கு போது 8 வது ஓவரின் கடைசி பந்தை வீசிய ப்ரஸீத் கிருஷ்ணா வேசியபோது எதிரணியினர் ஒரு ரன்னை எடுத்தனர். அப்போது அந்த ரன்னை தடுக்க கிருஷ்ணா ஸ்டம்பை நோக்கி வீச முயன்றார்.
அப்போது தினேஷ் கார்த்திக் வேண்டாம் என்று கூறியும் அவர் பந்தை வீசியதால் அது இன்னொரு ரன்னை எடுக்க வழி வகுத்து இதனால் ஆத்திகரமடைந்த தினேஷ் கார்த்திக் கிருஷ்ணாவை கேட்ட வார்த்தையில் திட்டியுள்ளார். அது தெள்ள தெளிவாக ஸ்டம்பில் உள்ள மைக்கில் பதிவாகியுள்ளது. இதோ அந்த வீடியோ பதிவு.