KKR vs RR : நடராஜர் போன்று நின்று சிக்ஸ் ஒன்றினை அடித்த கொல்கத்தா கேப்டன் கார்த்திக் – வீடியோ

ஐ.பி.எல் தொடரின் 43 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ஸ்மித் தலைமை

Karthik-1
- Advertisement -

நேற்று ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் முதலில் ஆடிய கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் அபாரமாக விளையாடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 97 ரன்களை குவித்தார். இதில் 9 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் ஒரு சிக்ஸ் நடராஜர் சிலை போன்ற வடிவில் சிக்ஸர் ஒன்றினை அடித்தார். அந்த பந்து சிக்ஸர் போனதும் பவுலர் ஆச்சரியப்பட்டார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

தோனியின் ஹெலிகாப்டர் சிக்ஸ் எவ்வளவு சிறப்பாக இருக்குமோ அந்த அளவிற்கு கார்த்திக்கின் நடராஜர் ஷாட் இருந்ததாக ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் தொடரின் 43 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

- Advertisement -

Smith

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 97 ரன்களை அடித்தார். இதனால் ராஜஸ்தான் அணிக்கு 176ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Riyan

தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி இளம் வீரர் ரியான் பராக் மற்றும் ஆர்ச்சர் ஆகியோரது அபார ஆட்டத்தினால் 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை குவித்து வெற்றிபெற்றது. அதிகபட்சமாக ரியான் பராக் 31 பந்துகளில் 47 ரன்களை குவித்தார். மேலும், ஆர்ச்சர் 12 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சருடன் 27 ரன்களை குவித்தார். 4 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக பந்துவீசிய ராஜஸ்தான் வீரர் வருண் ஆரோன் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement