யுவ்ராஜ்க்கு மட்டும் தான் இந்த உரிமை இருக்கு. உங்களுக்கு இல்லை – கார்த்திக்கை விளாசிய பி.சி.சி.ஐ

Karthik
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் தற்போது கரீபியன் பிரீமியர் லீக் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் டிரின்பாகோ அணியின் டிரஸ்ஸிங் ரூமில் இந்திய அணியின் வீரரான தினேஷ் கார்த்திக் அந்த அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் உடன் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் சில நாட்களுக்கு முன் இணையத்தில் வைரலானது.

karthik

- Advertisement -

மேலும் டிரின்பாகோ அணியின் ஜெர்சியை அணிந்து தினேஷ் கார்த்திக் அங்கு அமர்ந்திருந்தார். இது பிசிசிஐ விதிகளுக்கு எதிரானது என்று தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து பி.சி.சி.ஐ யுவராஜ் சிங்கிற்கு மட்டுமே வெளிநாட்டுக்கு விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கார்த்திக் அங்கு செல்ல என்ன காரணம் என்று பிசிசிஐ தினேஷ் கார்த்திக்கிடம் விளக்கம் கேட்டிருந்தது.

மேலும் அவருடன் ஒப்பந்தத்தை ரத்து செய்ய போவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பிசிசிஐயின் இந்த நோட்டீசுக்கு கார்த்திக் அளித்த பதிலாவது : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் மற்றும் டிரின்பாகோ அணிக்கும் அவர்தான் பயிற்சியாளர் எனவே நான் அவருடைய அழைப்பின் பேரில் தான் நான் அங்கு சென்றேன்.

Karthik

மேலும் கொல்கத்தா அணி குறித்தும் வீரர்கள் குறித்தும் ஆலோசனை நடத்தவே நான் அங்கு சென்றேன் என்றும் ஓய்வாக அமர்ந்து போட்டியை பார்க்கலாம் என்று அவர் அழைத்ததால் நான் அந்த போட்டியை பார்த்தேன் என்றும் இது தவறுதான். இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன் என்றும் தினேஷ் கார்த்திக் பிசிசிஐக்கு விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement