உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்த 2 வீரர்களை அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் – பி.சி.சி.ஐ

pandya
- Advertisement -

உலகக் கோப்பையின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 9 போட்டிகளில் பங்கேற்று 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதனால் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் வரும் ஒன்பதாம் தேதி அரையிறுதிப் போட்டியில் மோத உள்ளது.

ind

- Advertisement -

உலக கோப்பை தொடர் முடிய இன்னும் ஒரு வாரமே உள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் இருந்து இரண்டு வீரர்களை உலக கோப்பை தொடருக்குப் பின் நீக்க பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி இந்த உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில் இந்திய அணியில் ஜாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தகுதிபெற்றனர். ஆனால் இவர்கள் இருவரையும் அணியிலிருந்து நீக்க தற்போது பி.சி.சி.ஐ திட்டம் வைத்துள்ளதாக தெரிகிறது.

ஏனெனில் ஜாதவ் இந்த உலக கோப்பை தொடரில் சொல்லிக்கொள்ளும்படி ஆடவில்லை. மேலும் 2017 ஆம் ஆண்டு அறிமுகமானவர் பெரிய அளவில் இந்திய அணிக்காக சாதிக்கவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை அதனால் அவர் அணியில் இருந்து கழற்றிவிடப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

Karthik

மேலும் தினேஷ் கார்த்திக் 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வந்தாலும் இந்த உலக கோப்பை தொடரில் முதன்முறையாக அணியில் பங்கேற்றார். அதனால் இவரும் இந்த உலகக்கோப்பை முடிந்த பின் அணியில் இருந்து நீக்கப்படுவார். ஏனெனில் அவருக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்க திட்டம் இருப்பதால் இவரது இடமும் கேள்விக்குறியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement