- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மெடலை மட்டும் மாற்றி.. சச்சின் நோ சொல்லிருக்கனும்.. பட்டோடி பெயர் மறைந்தது பற்றி கர்சன் கவ்ரி விமர்சனம்

இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி 2 – 2 (5) என்ற கணக்கில் பகிர்ந்து கொண்டது. அதிலும் கடைசிப் போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் அசாத்தியமான வெற்றியைப் பெற்றது மறக்க முடியாததாக அமைந்தது. முன்னதாக 2007 முதல் இங்கிலாந்து மண்ணில் இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடர்கள் பட்டோடி கோப்பை என்றழைக்கப்பட்டு வந்தது.

அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இப்திகார் அலிகான் பட்டோடி இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்காகவும் விளையாடி அதனுடைய வளர்ச்சிக்கு பங்காற்றியவர். அவருடைய மகன் மன்சூர் அலிகான் பட்டோடி கானும் இந்தியாவுக்காக விளையாடி முக்கிய பங்காற்றினார். அதனால் அவர்களுடைய பொதுப் பெயரை இங்கிலாந்து வாரியம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கோப்பைக்கு பெயராக சூட்டியது.

- Advertisement -

சச்சின் நோ சொல்லிருக்கனும்:

ஆனால் இம்முறை அந்தக் கோப்பைக்கு ஓய்வு கொடுத்த இங்கிலாந்து வாரியம் சச்சின் டெண்டுல்கர் – ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோருடைய பெயரில் புதிய கோப்பையை உருவாக்கியது. அப்போது பட்டோடி பெயர் மறைந்து விடக்கூடாது என்பதற்காக கோப்பையை வெல்லும் கேப்டனுக்கு பட்டோடி மெடலை பரிசளிக்குமாறு சச்சின் கேட்டுக்கொண்டார். ஆனால் தொடர் சமநிலையில் முடிந்ததால் பட்டோடி மெடல் எந்த கேப்டனுக்கும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இங்கிலாந்து – இந்தியா தொடரிலிருந்து பட்டோடி பெயர் மறைந்து போவதற்கு சச்சின் டெண்டுல்கர் சம்மதம் தெரிவித்திருக்கக் கூடாது என்று முன்னாள் வீரர் கர்சன் கவ்ரி கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அது மிகவும் தவறானது. ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் தொடர் எப்போதும் பிராங்க் – வோரேல் கோப்பை என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது”

- Advertisement -

கவ்ரி விமர்சனம்:

“இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் தொடர்கள் பார்டர் – கவாஸ்கர் பெயரில் அழைக்கப்படுகிறது. ஒருவேளை அந்தப் பெயர் மாற்றப்பட்டால் கவாஸ்கர் மொத்த இந்தியாவையும் அசைத்துப் பார்ப்பார். அதே போல பட்டோடி கோப்பையை ஆண்டர்சன் – டெண்டுல்கர் என்று மாற்றுவதற்கு சச்சின் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும்”

இதையும் படிங்க: டெய்லி 4 பேரை வெச்சு ரோஹித்தை 10 கி.மீ ஓடவிட்டா.. இந்தியாவுக்காக 45 வரை க்ளாஸ் காமிப்பாரு.. யோக்ராஜ் பேட்டி

“டைகர் பட்டோடி பெயர் ஏற்கனவே இருப்பதால் என்னுடைய பெயரை பயன்படுத்த விரும்பவில்லை என்று சச்சின் தெரிவித்திருக்க வேண்டும். பட்டோடி இந்திய கிரிக்கெட்டின் லெஜெண்ட். ஒருவேளை நீங்கள் மெடலை கொடுக்க விரும்பினால் அதற்கு உங்களுடைய (சச்சின்) பெயரை பயன்படுத்திக் கொள்ளலாம். கோப்பையின் பெயர் அப்படியே இருந்திருக்க வேண்டும். முதலில் இந்த கேள்வியே வந்திருக்கக் கூடாது. இது ஒரு ஜாம்பவானுடைய பெயரை அவமதிப்பது போல் இருக்கிறது” என்று கூறினார்.

- Advertisement -