1975 உலகக் கோப்பையில் ஆமைப்போல கவாஸ்கர்.. 174 பந்தில் 36 ரன்ஸ் எடுத்தது ஏன்? சக வீரர் கர்சன் கவ்ரி

Karsan Ghavri
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் காவாஸ்கர் மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். 1970களில் ராஜாங்கம் நடத்திய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்களை ஹெல்மெட் போடாமலேயே எதிர்கொண்ட அவர் நிறைய ரன்களையும் சதங்களையும் அடித்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலருக்கு ரோல் மாடலாக திகழும் கவாஸ்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு சதத்தை மட்டுமே அடித்துள்ளார். குறிப்பாக 1975ஆம் ஆண்டு இங்கிலாந்தில் முதல் முறையாக ஐசிசி உலகக் கோப்பை நடைபெற்றது. அத்தொடரில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 335 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்து அசத்தியது.

- Advertisement -

ஆமைவேக கவாஸ்கர்:

அதை துரத்திய இந்தியாவுக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட்டைப் போல மெதுவாக விளையாடினார். முழுமையாக 60 ஓவர்கள் விளையாடிய அவர் 36* (174) ரன்கள் எடுத்தார். அவருடைய ஆமை வேக ஆட்டத்தால் 60 ஓவரில் 132/3 ரன்களை எடுத்த இந்தியா 202 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

அதன் காரணமாக கவாஸ்கரின் ஆட்டம் இந்திய அணியில் இருந்தவர்களையே கோபமடைய வைத்தது. இந்நிலையில் அன்றைய நாளில் ஏன் மெதுவாக விளையாடினீர்கள்? என்று கவாஸ்கரிடம் இந்திய அணியின் மேனேஜர் கேட்டதாக கர்சன் கவ்ரி கூறியுள்ளார். அதற்கு கவாஸ்கர் சொன்ன பதில் குறித்து அவருடன் விளையாடிய சக வீரரான கர்வி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ஆமைவேகம் ஏன்:

“அந்த காலங்களில் இந்திய வீரர்களான எங்களுக்கு எப்படி ஒருநாள் கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பது தெரியவில்லை. முதல் போட்டியிலேயே இங்கிலாந்து 34 ரன்கள் அடித்தது. அடுத்ததாக பேட்டிங் செய்த எங்களுக்கு கவாஸ்கர் முழுமையாக 60 ஓவர்கள் விளையாடினார். அந்த ஆட்டத்தின் போது ஒன்று வேகமாக விளையாடுங்கள் அல்லது அவுட்டாகுங்கள் என்ற மெசேஜ் கவாஸ்கருக்கு பலமுறை கொடுக்கப்பட்டது”

இதையும் படிங்க: டி20 போட்டிகளை பொறுத்தவரை கே.எல் ராகுலின் கட்டம் முடிந்து விட்டது.. இனி திரும்ப முடியாது – ஆகாஷ் சோப்ரா கருத்து

“ஆனால் கவாஸ்கர் 1970களின் கவாஸ்கராக விளையாடினார். அவர் யாருடைய பேச்சையும் கேட்காமல் டானி கிரைக், ஜெப் அர்னால்டு, கிறிஸ் ஓல்ட், பாப் வில்ஸ் ஆகியோரை முழுமையாக எதிர்கொண்டு விளையாடினார். அதற்கான காரணத்தைக் கேட்ட போது “வருங்கால டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தை எதிர்கொள்வதற்காகவே தற்போது அவர்களின் பவுலர்களை அப்படி எதிர்கொண்டேன்” என்று கவாஸ்கர் போட்டியின் முடிவில் சொன்னார். அது இந்திய அணியில் கொந்தளிப்பை உண்டாக்கியது. அணியின் மேனேஜர் விளக்கம் கேட்ட போது என்னை தனியாக விடுங்கள் என்று கவாஸ்கர் சொன்னார்” எனக் கூறினார்.

Advertisement