சிறந்த ஐ.பி.எல் லெவன் அணியை தேர்வு செய்த சி.எஸ்.கே வீரர். செம டீம்தான் – அணிவீரர்களின் விவரம் இதோ

karnsharma
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் இருந்தது. அதற்கு முடிவு கட்டும் விதமாக கடந்த எட்டாம் தேதி தான் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது சவுத்தாம்ப்டன் நகரில் தொடங்கி நடந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்திய இந்திய வீரர்கள் மட்டுமின்றி உலக அளவில் இருக்கும் வீரர்களும் கிரிக்கெட் குறித்த தங்களது அனுபவங்களையும், வீரர்கள் குறித்த தங்களது தனிப்பட்ட கருத்துக்களையும் சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சி.எஸ்.கே அணியின் வீரரான கர்ன் சர்மா தற்போது சிறந்த ஐ.பி.எல் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார்.

இந்நிலையில் அவர் தேர்வு செய்த ஆல்டைம் லெவன் அணியில் துவக்க வீரர்களாக மும்பை அணியை சேர்ந்த கேப்டன் ரோகித் சர்மாவும், பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் கிறிஸ் கெய்லையும் தேர்வு செய்துள்ளார். அடுத்து மூன்றாவது வீரராக ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த கோலியை தேர்வு செய்துள்ளார்.

நான்காவது வீரராக ஐ.பி.எல் போட்டிகளில் அடித்த ரன்கள் அடித்த இரண்டாவது வீரரான சுரேஷ் ரெய்னாவை தேர்வு செய்துள்ளார். அதுமட்டுமின்றி ஐந்தாவது வீரராகவும், கீப்பராகவும், கேப்டனாகவும் அனைத்து வகையிலும் தோனியை தேர்வு செய்துள்ளார். ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

ஸ்பின் பவுலர்களாக ஹர்பஜன் மற்றும் அமித் மிஸ்ராவை சீனியர் வீரர்கள் என்ற அடிப்படையில் தெரிவு செய்த அவர் வேகப்பந்து வீச்சாளர்களாக இந்திய அணியைச் சேர்ந்த புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோரை தெரிவு செய்துள்ளார்.

Bravo

கர்ன் ஷர்மா தேர்வு செய்த ஐபிஎல் அணி இதோ :

கிறிஸ் கெய்ல், ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ட்வைன் பிராவோ, அமித் மிஸ்ரா, ஹர்பஜன் சிங், புவனேஷ்வர் குமார், பும்ரா.

Advertisement