ஆஸி டி20 உலகக்கோப்பையை அறிமுகப்படுத்தும் விழாவில் கலந்துகொண்டு கோப்பையை அறிமுகம் செய்த – இந்திய பெண் பிரபலம்

Cup

ஆஸ்திரேலியாவில் அடுத்த 2020 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை நடைபெற உள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு கிரிக்கெட் அணிக்கும் ஆஸ்திரேலியா மைதானத்திலேயே போட்டிகள் நடைபெறுகின்றன.

அதில் பெண்கள் அணிக்கான டி20 உலகக்கோப்பை பிப்ரவரி 21ம் தேதி துவங்குகிறது. ஆண்களுக்கான கிரிக்கெட் உலக கோப்பை அக்டோபர் மாதம் 18ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில் இந்த இரு உலக கோப்பை தொடரின் கோப்பையை அறிமுகப்படுத்தும் விழாவில் பாலிவுட் நடிகையும் சைப் அலிகானின் மனைவியுமான கரீனா கபூர் நேற்று கலந்துகொண்டு கோப்பையை அறிமுகப்படுத்தினார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பின் காரணமாக அவர் மெல்போர்ன் சென்று அந்த மைதானத்தில் நேற்று கோப்பையை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் இந்த துவக்க விழாவில் பங்கேற்றதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்து ட்விட்டர் பக்கத்திலும் அதனை சிறப்பு செய்தியாக பகிர்ந்துள்ளது. தற்போது கரீனாகபூர் வெளியிட்ட அந்த கோப்பை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.