- Advertisement -
ஆசிய கோப்பை

பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் நிச்சயம் குல்தீப் யாதவ் இதை செய்வார் – சிறுவயது கோச் பேட்டி

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். இந்த தொடரின் முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக விளையாடிய அவர் 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தார்.

குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை எடுப்பார் : கபில் பாண்டே கருத்து

அதற்கு அடுத்து இரண்டாவதாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி அவர் 18 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி பாகிஸ்தான் அணியை தோற்கடிக்க மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார். முதல் இரண்டு லீக் ஆட்டங்களிலும் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவருக்கு அடுத்தடுத்த போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

- Advertisement -

அதன் பின்னர் ஓமன் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த கடைசி லீக் ஆட்டத்திலும் ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். இப்படி இந்த தொடர் முழுவதுமே 3 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8 விக்கெட்டுகளை எடுத்து அசத்தலாக செயல்பட்டு வருகிறார்.

இவ்வேளையில் இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் சூப்பர் 4 போட்டியிலும் அவர் அற்புதமாக பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னதாக பேசியுள்ள குல்தீப் யாதவின் சிறு வயது பயிற்சியாளரான கபில் பாண்டே அவர்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது : இந்திய அணி மிக வலிமையான அணியாக இருக்கிறது. அதனால் லீக் சுற்று போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது போல் இந்த போட்டியிலும் எளிதாக அவர்களை வீழ்த்தி அசத்துவார்கள். அதேபோன்று இந்திய அணியில் நல்ல சமநிலை இருப்பதால் இந்த தொடரில் மற்ற அணிகள் நம்மை வீழ்த்துவது கடினம்.

இதையும் படிங்க : பெங்களூருவில் வெறித்தனமான பயிற்சியில் ஈடுபட்டுள்ள ரோஹித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் – எதற்கு தெரியுமா?

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்துவார். அப்படி இல்லையென்றால் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி ரன்களை குறைவாகவே விட்டுக் கொடுப்பார். அதன் மூலம் நிச்சயம் அவர் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக நிற்பார் என்றும் கபில் பாண்டே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -