சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2025 ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரானது செப்டம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள வேளையில் அந்த தொடருக்கு அடுத்ததாக இந்திய அணி ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
தீவிர வலைப்பயிற்சியில் ரோஹித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் :
அப்படி ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அக்டோபர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான அட்டவணையையும் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளியாகிவிட்டது.
இந்நிலையில் எதிர்வரும் அக்டோபர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 25-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடுவார்கள் என்பதனால் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது விராட் கோலி இங்கிலாந்தில் தனது ஓய்வு நேரத்தினை செலவிட்டு வரும் வேளையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெங்களூரில் உள்ள பி.சி.சி.ஐ அகாடமி மைதானத்தில் தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகிறார். ஏனெனில் கடைசியாக ஐபிஎல் தொடரில் விளையாடியிருந்த அவர் அதன்பிறகு எந்தவொரு சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை.
அதனால் ஆஸ்திரேலிய தொடருக்காக சரியான முறையில் தயாராகும் வகையில் ரோஹித் சர்மா தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகிறார். அதேபோன்று மற்றொரு இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல் ராகுலும் அவருடன் இணைந்து தீவிர வலைப்பயிற்சியினை மேற்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க : சுப்மன் கில்லிடம் இருக்கும் குறையை சரி செய்ய பந்துவீச்சாளராக மாறிய அபிஷேக் சர்மா – இதுதான் பிரண்ட்ஷிப்
ஏனெனில் அவர் தற்போது ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது பயிற்சி போட்டியில் விளையாட இருப்பதன் காரணமாக அவரும் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தீவிரமாக தயாராகி வருகிறார். இப்படி ரோஹித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் அர்ப்பணிப்புடன் பயிற்சியில் ஈடுபட்டு வருவது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.



