நாட்டை விட யாரும் பெருசில்ல.. இனிமேலாவது நன்றியை காட்டுங்க.. இஷான், ஸ்ரேயாஸ் நீக்கம் பற்றி கபில் தேவ்

Kapil Dev
- Advertisement -

இந்திய கிரிக்கெட்டின் ஆணிவேராக கருதப்படும் ரஞ்சிக்கோப்பை உள்ளூர் தொடரில் விளையாடுவதை சமீப காலங்களாகவே நட்சத்திர வீரர்கள் புறக்கணித்து வருகின்றனர். குறிப்பாக ஐபிஎல் தொடரில் கோடிக்கணக்கான சம்பளமாக கிடைப்பதால் இப்போதெல்லாம் ரஞ்சிக் கோப்பைக்கு இந்திய வீரர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதற்கேற்றார் போல் சமீப காலங்களில் தேர்வுக் குழுவினரும் ஐபிஎல் தொடரில் அசத்திய வீரர்களுக்கே இந்திய அணியில் முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்து வருகின்றனர்.

ஆனால் தற்போது இவற்றை மாற்ற விரும்பியுள்ள பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு 2023 – 24 காலண்டர் வருடத்திற்கான இந்திய அணியின் மத்திய சம்பள அந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ரஞ்சிக் கோப்பையில் விளையாட மறுத்த இசான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய நட்சத்திர வீரர்களை பிசிசிஐ அதிரடியாக நீக்கியுள்ளது. மேலும் ரஞ்சிக் கோப்பையில் அசத்திய சர்பராஸ் கான் போன்ற இளம் வீரர்களுக்கு முன்னுரிமையுடன் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

- Advertisement -

கபில் தேவ் ஆதங்கம்:
இருப்பினும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவது தனிப்பட்ட வீரர்களின் விருப்பம் என்பதால் இஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு சில எதிர்ப்புகளும் காணப்படுகின்றது. இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிசிசிஐயின் இந்த முடிவை வரவேற்பதாக ஜாம்பவான் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.

சமீப காலங்களில் ரஞ்சிக் கோப்பைக்கு முக்கியத்துவம் கிடைக்காமல் போனதால் தாம் சோகத்துடன் இருந்ததாக கபில் தேவ் கூறியுள்ளார். மேலும் இது சர்வதேச அளவில் விளையாடுவதற்கு உதவிய மாநில வாரியங்களுக்கு இந்திய வீரர்கள் நன்றி செலுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதாகவும் கபில் தேவ் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் இதற்காக சில வீரர்கள் மனம் உடைந்தது போல் உணர்வார்கள். ஆனால் அவர்களை அப்படியே விடுங்கள்”

- Advertisement -

“ஏனெனில் இங்கே நம் நாட்டை விட யாரும் பெரியவர் கிடையாது. உள்ளூர் கிரிக்கெட்டை பாதுகாப்பதற்காக எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு நான் பிசிசிஐயை வாழ்த்துகிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவதற்கு உதவிய உள்ளூர் கிரிக்கெட்டை நமது வீரர்கள் புறக்கணிப்பதை பார்த்து ஒரு கட்டத்தில் நான் சோகத்துடன் இருந்தேன். அப்படிப்பட்ட நேரத்தில் பிசிசிஐ எடுத்துள்ள இந்த வலுவான நடவடிக்கை அவர்களுக்கு ஒரு செய்தியை கொடுக்கிறது. இது உள்நாட்டு கிரிக்கெட்டை காப்பாற்றுவதில் நீண்ட தூரம் செல்லும்”

இதையும் படிங்க: இங்கிலாந்து ஜாம்பவான் கிரகாம் கூச்.. 34 வருட சாதனையை உடைக்கப் போகும் ஜெய்ஸ்வால்.. கிடைத்துள்ள வாய்ப்பு

“சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்கள் நேரம் இருக்கும் போது தங்களுடைய மாநிலத்திற்கு விளையாட வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். அது தங்களுடைய மாநில இளம் வீரர்களுக்கு அவர்கள் உதவி செய்வதற்கான வாய்ப்பை கொடுக்கிறது. மேலும் அது உங்களை சர்வதேச வீரராக உருவாக்க மாநில கிரிக்கெட் வாரியம் ஆற்றிய சேவைகளுக்கு நீங்கள் திருப்பி செலுத்துவதற்கான வழியாகவும் அமைகிறது” என்று கூறினார்.

Advertisement