உங்களின் ஆதரவினாலே நமக்கு வெற்றி கிடைக்கும். ப்ளீஸ் சப்போர்ட் பண்ணுங்க – கபில் தேவ் வேண்டுகோள்

Kapil-Dev
- Advertisement -

கொரோனா வைரஸ் இந்தியாவில் காட்டுத்தீ போன்று வேகமாக பரவி வருகிறது. கடந்த வாரத்தில் 100க்குள் இருந்த கரோனா தற்போது 700 பேரை தாக்கியுள்ளது. மேலும் அடுத்த வாரத்தில் இன்னும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதனால் இந்தியாவில் இன்னும் பாதுகாப்பு அதிகரிக்கும் என்றே தெரிகிறது.

Corona-1

- Advertisement -

இதன் காரணமாக தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு சமூக இடைவெளியை பின்பற்றவும், 21 நாள் ஊரடங்கில் இருக்கும்படி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த கரோனாவிற்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது :

நாம் வீட்டிற்குள்ளே இருப்பதற்கு நீங்கள் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். இந்த வைரஸை ஒழிக்க கண்டிப்பாக இந்த ஒரு உதவியைச் செய்தால் போதும் இது நேர்மறையான வழிக்கு எடுத்துச் சென்று நம்மை வெற்றி பெற வைக்கும். வீட்டிற்குள்ளேயே இருப்பது மற்றும் ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

corona 1

இந்த சூழ்நிலையை நாம் ஏற்று நமக்கு ஒரு சவாலான உலகத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நமது வீட்டிற்குள் நமது உலகம் இருக்கிறது. அதுதான் நமது குடும்பம். புத்தகம், டிவி ,மியூசிக். சமூக வலைதளம் மூலம் பொழுதை போக்கலாம். அனைத்தும் நம்மிடமே உள்ளது.

- Advertisement -

நமது குடும்ப உறுப்பினர்களிடம் உரையாடுவது மிகச்சிறந்தது. நான் தற்போது எனது வீட்டையும் தோட்டத்தையும் நான் தான் சுத்தம் செய்கிறேன். மேலும் எங்கள் குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடுகிறேன். இதனை நான் பல வருடங்களாக இழந்துள்ளேன். இந்த போராட்டத்தில் இருந்து நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் இவ்வாறு கூறியுள்ளார் கபில்தேவ்.

kapil dhev

கபில் தேவ் மட்டுமின்றி சச்சின், கங்குலி போன்ற பலரும் கொரோனா வைரஸில் இருந்து காத்துக்கொள்ள விழிப்புணர்வு தகவல்களை அடிக்கடி கொடுத்து கொண்டு தான் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement