தோனி அடுத்த வருட ஐ.பி.எல் தொடரில் சாதிக்கனும்னா இதை செய்தே ஆக வேண்டும் – கபில் தேவ் அறிவுரை

Kapil-Dev
- Advertisement -

ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதும் இல்லாத வகையில் படுதோல்வியை சந்தித்து வெளியேறிவிட்டது. 14 போட்டிகளில் வெறும் 6 போட்டிகளில் மட்டுமே சென்னை அணி வெற்றி பெற்று ஐபிஎல் தொடரில் இருந்து பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்லாமல் இந்த வருடம் வெளியேறிவிட்டது. இதன் காரணமாக சென்னை ரசிகர்களும், விமர்சகர்களும் அந்த அணியின் மீது அதிருப்தியில் இருக்கின்றனர்.

குறிப்பாக அணியின் கேப்டன் தோனியின் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கு அவர் பெரிதாக வாய்ப்பு கொடுத்து கொடுப்பதில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறது. சமீபத்தில் சென்னை அணி விளையாடிய கடைசி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.

- Advertisement -

இந்த மூன்று போட்டியிலும் இளம் வீரரான ருதுராஜ் அரைசதம் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்றிருந்தார். ஆனால் தோனி இந்த வருடம் பெரிதாக அணிக்கு பேட்டிங்கின் மூலம் எதுவும் செய்யவில்லை என்றால் கடந்த ஒரு வருடமாக அவர் எந்தவிதமான தொழில்முறை போட்டியில் விளையாடி இருக்கவில்லை. இதன் காரணமாக அவரது உடலும் ஒத்துழைக்கவில்லை என்றே தெரிகிறது.

Dhoni-1

சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார். இப்படியிருக்கையில் தோனி ஒரு வருடம் எந்தவிதமான கிரிக்கெட் விளையாடாமல் நேரடியாக ஐபிஎல் தொடரில் வந்து ஆடுவது அவருக்கு நல்லதல்ல என்று பலரும் கூறி வருகின்றனர். இது குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரர் கபில்தேவ் கூறுகையில் …

பத்து மாதங்கள் எந்தவித கிரிக்கெட்டும் ஆடாமல் திடீரென ஐபிஎல் தொடரில் மட்டும் ஆடும் போது உடல் எந்த அளவிற்கு ஒத்துழைக்கும் என்பதை நாம் யோசித்து பார்க்க வேண்டும். இதற்காக தோனி தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டும். அவரது வயதை பற்றி பேசுவது சரியல்ல தொடர்ந்து ஏதாவது ஒரு போட்டியில் ஆடிக் கொண்டிருந்தால் அவரது உடல் ஒத்துழைக்கும் என்று தெரிவித்திருக்கிறார் கபில் தேவ்.

Advertisement